அரணாய் நீ வா! அத்தியாயம் - 1 அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை… நள்ளிரவு பதினோரு மணி! சாலையின் ஓரமாக சைரன் சத்தம் எதுவுமின்றி, அதன் விளக்கை மட்டுமே ஔிரவிட்டபடி நின்றிருந்தது அந்தக் காவல் வாகனம். கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டியபடி, கார் பேனட்டில் சாய்ந்து நின்றிருந்தான் அவன். காவல்துறையின் பிரத்யேகமான காக்கி சீருடையில், கச்சிதமான உடற்கட்டும், கரிய மீசையும், எதிராளியை எச்சரிக்கும்படியான துளைத்தெடுக்கும் பார்வையுமாக நின்றிருந்தான். அவன்… அரண் செழியன்! அருப்புக்கோட்டை காவல் நிலைய துணை காவல் ஆய்வாளர்! அன்று நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் கனரக வாகனங்களை சோதனை செய்வதற்கான இரவு நேரப் பணியில் இருந்தான். அவனுடன் மூன்று கான்ஸ்டபிள்களும் அந்தப் பணியில் இணைந்திருந்தனர். அப்பொழுது சாலையில் ஒரு லாரி வருவதைக் கண்டு, “சிதம்பரம்! அந்த லாரியை ஓரங்கட்டுங்க” என்றான் செழியன். “ஓகே சார்!” என்று அவனது கட்டளைக்கு பதிலளித்தவரும், சாலைக்குச் சென்று கையசைத்து அந்த லாரியை ஓரமாக நிறுத்தும்படி கூறினார். காவல்துறை அதிகாரியைக் கண்டதும் லாரி ஓட்டுனர், வாகனத்தின் வேகத்தைக் குறைத்து லாரியை சாலையின் ஓரமாக நி...
Comments
Post a Comment