Ongoing Novels
அரணாய் நீ வா - Epi 16
- Get link
- X
- Other Apps
அரணாய் நீ வா!
அத்தியாயம் – 16
காலை பதினோரு
மணியளவில் செழியனின் வீட்டிற்கு வந்தனர் பார்கவி மற்றும் அவளது குடும்பத்தினர்.
இனியன் ஏற்கனவே
அவர்களது வரவை தன் வீட்டினருக்குத் தெரிவித்திருக்க, “வாங்க! வாங்க!”
என்று வாசலுக்கே சென்று அவர்களை வரவேற்றார் ஆதிரை செல்வி.
“என்னங்க!
சம்பந்தி வீட்டுக்காரங்க வந்திருக்காங்க” என்று
ஆதிரை குரல் கொடுக்கவும், சண்முகநாதனும் ஹாலுக்கு வந்து விட்டார்.
இனியனோ யாரும்
அறியாமல் செய்கிறேன் பேர்வழி என்று ஷாரதாவைப் பார்த்து கண்ணடிக்க, அதை சரியாக அவளுக்குப் பின்னால்
வந்து நின்ற ராஜேஷூம், மாதேஷூம் பார்த்து விட்டனர்.
‘ஐய்யயோ…
இந்த இரட்டை கதிர்கள் வேற வந்திருக்கானுங்களா? தெரியாம இவனுங்க முன்னாடி வச்சு கண்ணடிச்சு தொலைச்சுட்டோமே’ என்று நினைத்தபடி,
“வாங்க!
வாங்க! ராஜேஷ்… மாதேஷ்…
என்ன அதிசயமா குடும்பத்தோட சேர்ந்து வந்திருக்கீங்க? இன்னைக்கு காலேஜ் லீவா?” என்று இனியன் கேட்க,
“கால்
மீ ராஜ்” என்று ராஜேஷூம்,
“ஐ
ஆம் மேடி” என்று மாதேஷூம் முகத்தை சீரியசாக வைத்தபடி பதில் கூறினர்.
அதைக் கேட்டதும், ‘இந்த டயலாக்கை நாம எங்கேயோ
கேட்டிருக்கோமே!’ என்று நினைத்தபடி சில நொடிகள் யோசித்தவன் அப்படியே
தலையைத் திருப்பி சற்று தூரமாக நின்ற தன் காதலியைப் பார்த்தான்.
‘என்
பேரு சாரதா இல்ல ஷாரதா!’ என்று தன் பெயருக்காக அவள் தன்னிடம்
மல்லுக்கு நிற்பது அவனுக்கு சட்டென நினைவு வந்தது.
“அடப்பாவிங்களா!
குடும்பமே பெயர் கரெக்ஷன் பண்ணிட்டு தான் அரையுறீங்களாடா? தெரியாத்தனமா இவங்ககிட்ட வந்து மாட்டிகிட்டேனே” என்று
இனியன் முணுமுணுக்க,
“இப்போ
என்ன சொன்னீங்க?” என்று கேட்டான் ராஜேஷ்.
“அது
ஒண்ணுமில்ல ராஜ்! ட்ரவல் பண்ணி வந்ததுல டயர்டா இருப்பீங்க.
உள்ளே போங்க!” என்று இனியன் எதையோ சொல்லி சமாளிக்க,
“டேய்
நம்ம சின்ன மச்சான் ரொம்ப ஃபன்னியா பேசுறாருல்ல” என்று ராஜேஷ்
மாதேஷிடம் கூற, அவனோ,
“யா
ப்ரோ! வெர்ரி ஃபன்னி. இவரை வச்சு அப்பப்போ
டைம் பாஸ் பண்ணிக்கலாம்!” என்று கூறி சிரித்தபடியே அவனுடன் சேர்ந்து
உள்ளே சென்றான்.
அவர்கள்
தன்னை கேலி செய்து சிரித்ததைக் கண்டு,
‘டேய் இனியன்! சுண்டைக்காய் பசங்க எல்லாம் கேலி
பண்ணுற நிலைமை ஆகிப் போச்சே உனக்கு!’ என்று நினைத்தபடி அவன் நின்றிருக்க,
அவனை அங்கு தேடி வந்தாள் ஷாரதா.
“இங்கே
நின்னு என்ன பண்ணிட்டிருக்க இனியன்? உள்ளே வா!” என்று அவள் அழைக்க,
“உன்
தம்பிங்க இரண்டு பேரும் என்னை வந்ததுமே கலாய்ச்சிட்டு போறானுங்க தெரியுமா? சின்ன மச்சான் ஃபன்னியா இருக்காரு. அவரை வச்சு டைம் பாஸ்
பண்ணிக்கலாம்னு சொல்லி சிரிச்சுட்டு போறானுங்க” என்று இனியன்
ஆதங்கப்படவும்,
“ச்ச…
இவ்வளவு தானா? அவனுங்க சின்ன பசங்க விளையாட்டா
ஏதாவது பேசியிருப்பாங்க” என்றவள்,
“சரி
அதை விடு இனியன். நீ வா! உள்ளே போகலாம்”
என்று அவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்ல எத்தனித்தாள்.
உடனேயே அவளது
கரம் பற்றி அவளைத் தடுத்து நிறுத்தினான் இனியன்.
சட்டென நின்று
அவனை திரும்பிப் பார்த்தவளோ,
“இப்போ என்னடா வேணும் உனக்கு?” என்று கேட்க,
“நேத்து
உன்கிட்ட பேசும் போது நான் என்ன சொன்னேன்?” என்று கேட்டான்.
“என்ன
சொன்ன?” என்று புரியாமல் கேட்டவளிடம்,
“ப்ம்ச்…
எனக்கு ஸ்பெஷல் கிஃப்ட் வேணும்னு சொன்னேனா இல்லையா?” என்றவனிடம்,
“ஓஓஓ…
நீ அதைச் சொல்றியா?” என்றவள்,
“இரு…
உன்னோட கிஃப்டை எடுத்துட்டு வர்றேன்!” என்றபடி
வேகமாக வீட்டிற்குள் சென்றாள்.
“என்னது?
கிஃப்டை எடுத்துட்டு வருவாளா? நாம என்ன கேட்டோம்.
இவ என்ன சொல்லிட்டு போறா?” என்று அவன் புலம்பியபடி
நின்றிருக்க, வீட்டிற்குள்
சென்ற ஷாரதாவோ, கையில் ஒரு டிபன் பாக்சுடன் வெளியே வந்தாள்.
அதைக் கண்டதுமே, “இதுல என்ன இருக்கு ஷாரூ?
ஸ்பெஷல்னு சொன்னதும் ஏதாவது ஸ்வீட் செஞ்சு எடுத்துட்டு வந்திருக்கியா?”
என்று கேட்டான் இனியன்.
அவளோ மறுப்பாக
தலையசைத்தபடி, “நீயே திறந்து பாரு” என்றபடி அந்த டிபன் பாக்சை அவனிடம்
நீட்டினாள்.
அந்தப் பாத்திரத்தை
திறந்து பார்த்தவனோ புருவம் சுருக்கியபடி,
“என்னடி இது?” என்று கேட்க,
“நேத்து
உன் ப்ரெயினை (Brain) யூஸ் பண்ணி எனக்கு ஐடியா கொடுத்ததுல,
எப்படியும் உனக்கு மூளை கொஞ்சம் செலவாகியிருக்கும். அதுக்கு தான் ஸ்பெஷலா உனக்காக மூளை பொரியல் செஞ்சு எடுத்துட்டு வந்திருக்கேன்.
நல்லா சாப்பிட்டு அறிவை வளர்த்துக்கோ இனியன். அப்போ
தான் ஃபியூச்சர்ல எனக்கு நல்ல நல்ல ஐடியாவா கொடுப்ப!” என்று ஷாரதா
கூற, அவனோ வேகமாக மூச்சு வாங்கியபடி கோபத்துடன் அவளையே முறைத்துப்
பார்த்தான்.
அவனது முகம்
மாறுவதைக் கண்டதுமே நைசாக அங்கிருந்து நழுவி வீட்டிற்குள் சென்று விட்டாள் ஷாரதா.
தனது கையில்
இருந்த டிபன் பாக்சை குனிந்து பார்த்த இனியனோ, “இல்ல… இவங்களுக்கெல்லாம்
என்னைப் பார்த்தா எப்படி தெரியுதாம்?” என்றபடி பெருமூச்சு விட்டவன்,
“ஹையோ…
இந்த லூசு குடும்பத்துல வாக்கப்பட்டு நானும் என் அண்ணனும் என்ன அவஸ்தைப்படப்
போறோம்னு தெரியலையே! ஆண்டவா! நீ தான்பா
எங்களை காப்பாத்தணும்” என்று புலம்பியபடியே வீட்டிற்குள் சென்றான்.
வீட்டினுள்
இருந்த சோஃபாவில் அனைவரும் அமர்ந்திருக்க,
அவர்களுடன் இருந்த பார்கவிக்குத் தான் இதயம் படபடவென துடித்துக் கொண்டிருந்தது.
அவள் அரண்
செழியனைப் பார்த்துப் பேசி ஒருநாள் முழுதாகக் கழிந்து விட்டது. தான் பேசியது அவனது மனதை பாதித்திருக்கும்
என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.
தற்போது, அவனை எப்படி எதிர்கொள்வது
என்று தெரியாமல் தான் பதைபதைப்புடன் அமர்ந்திருந்தாள் அவள்.
“மாப்பிள்ளை
இப்போ எப்படி இருக்கார் சம்பந்தி? முதல்ல வருத்தமா இருந்தாலும்,
டிவியில அவரைப் பாராட்டி வந்த நியூசை பார்த்ததும் எங்களுக்கு ரொம்ப பெருமையா
இருந்தது” என்று சுகுமார் பேச்சை ஆரம்பிக்க,
“ஆமாமா…
எங்களுக்கும் சந்தோஷமா தான் இருந்தது சம்பந்தி. ஆனா, செழியனுக்கு இன்னும் காயம் முழுசா ஆறல. அதனால தான் வேலைக்கு இரண்டு வாரம் லீவு போட்டுட்டு ரெஸ்ட் எடுக்கறதுக்காக இங்கே
வந்திருக்கான்” என்றார் சண்முகநாதன்.
பின்னர், “செல்வி! நம்ம செழியனை வரச் சொல்லு!” என்று அவர் தன் மனைவியிடம்
கூற,
“இருக்கட்டும்
சம்பந்தி. இப்போதைக்கு மாப்பிள்ளை நல்லா தூங்கி ஓய்வெடுக்கட்டும்.
அவர் வெளியே வர்றப்போ பார்த்துக்கலாம்” என்றார்
சுகுமார்.
அப்பொழுது
நீலவேணி தான் கொண்டு வந்திருந்த ஒரு பையை ஆதிரை செல்வியிடம் நீட்டினார்.
அவரோ புன்முறுவலுடன்
அதை வாங்கி பையினுள் என்ன இருக்கிறது என்று பார்க்கவும், “அதுல மட்டன் சூப் இருக்கு
அண்ணி. மாப்பிள்ளைக்காக செஞ்சு எடுத்துட்டு வந்தோம். இதைச் சாப்பிட்டா அவருக்கு உடம்பு கொஞ்சம் தெம்பா இருக்கும்” என்றார் நீலவேணி.
“ஓஹ்…
சரிங்க அண்ணி!” என்று ஆதிரை சந்தோஷப்பட,
“சூப்பெல்லாம்
உங்க மூத்த மாப்பிள்ளைக்குத் தான் செஞ்சு தருவீங்களா அத்தை? எனக்கெதுவும்
இல்லையா?” என்று கேட்டான் இனியன்.
“ஐயோ…
அப்படி இல்லைங்க மாப்பிள்ளை. உங்களுக்கு பிடிக்கும்னு
நம்ம ஷாரதா மூளை பொரியல் எல்லாம் செஞ்சு எடுத்துட்டு வந்தாளே!” என்றவர் தன் மகளிடம் திரும்பி,
“ஏன்
ஷாரதா… நீ மாப்பிள்ளைகிட்ட அதை கொடுத்தியா இல்லையா?” என்று கேட்டார்.
தன் அன்னை
சொன்னதைக் கேட்டதும் நிமிர்ந்து தனக்கு எதிர் சோஃபாவில் அமர்ந்திருந்த இனியனை நோக்கினாள்
அவள்.
அவனோ வெளியே
சிரித்துக் கொண்டிருந்தாலும்,
ஷாரதாவை நினைத்து உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தான்.
அவனது முக
மாறுதல்களைக் கண்ட ஷாரதாவோ பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி, “அதை அப்பவே இனியன்கிட்ட கொடுத்துட்டேன்மா”
என்றாள்.
இதைக் கேட்ட
ஆதிரை செல்வியோ, “எப்போதிருந்துடா நீ மூளை பொரியல் எல்லாம் சாப்பிட ஆரம்பிச்ச. இத்தனை வருஷமா இவனுக்கு சமைச்சு போடுற எனக்கு இது தெரியாம போச்சு பாருங்களேன்!”
என்று கூற, இனியனோ யாரும் அறியாமல் ஷாரதாவை முறைத்தான்.
அவளோ காதிற்குப்
பின்னால் கூந்தலை சொருகியபடி ஒன்றும் அறியாத பிள்ளை போன்று அமர்ந்திருக்க, ‘இருடி… உன்னை அப்புறமா கவனிச்சுக்கறேன்’ என்று நினைத்தபடி அமர்ந்திருந்தான்
இனியன்.
“செல்வி
எல்லாருக்கும் மதிய சாப்பாடு ரெடி பண்ணிடு!” என்ற சண்முகநாதன்,
அனைவரையும் பொதுவாகப் பார்த்தபடி,
“எல்லாரும்
சாப்பிட்டு சாயந்தரமா கிளம்பிப் போனா போதும்” என்றார்.
“ஐயோ…
அதெல்லாம் வேண்டாம் சம்பந்தி. நாங்க மாப்பிள்ளை
வந்ததும் பார்த்துட்டு கிளம்புறோம்” என்று சுகுமார் சொன்னதை அவர்
ஏற்கவே இல்லை.
சண்முகநாதனின்
கட்டாயத்தின் பேரில் பார்கவியின் வீட்டார் அதற்கு சம்மதித்தனர்.
சிறிது நேரம்
ஒன்றாக அமர்ந்து பேசிய பிறகு ஆதிரை செல்வி சமைப்பதற்காகச் செல்ல, நீலவேணியும் அவருக்கு உதவி
செய்வதற்காகச் சென்று விட்டார்.
சண்முகநாதனும்
சுகுமாரும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, இரட்டையர்களான மாதேஷூம்,
ராஜேஷூம் இனியன் போட்டுக் கொடுத்த வீடியோ கேமை டிவியில் சுவாரஸ்யமாக
விளையாடிக் கொண்டிருந்தனர்.
பார்கவி
எதையோ யோசித்தபடி அமர்ந்திருக்க,
அவளறியாமல் ஷாரதாவை வெளியே வருமாறு அழைத்தான் இனியன்.
ஷாரதாவோ, ‘நான் வர மாட்டேன்’
என்று செய்கையால் அவனிடம் கூற,
‘இப்போ
நீ வரலைன்னா… நானே வந்து உன்னை குண்டுக்கட்டா தூக்கிட்டு போய்டுவேன்.
ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசணும். வெளியே
வா’ என்று அவளது எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைத்தான்
அவன்.
அவளும் வேறு
வழியில்லாமல் வெளியே நின்றிருந்தவனைத் தேடிச் சென்றாள்.
“என்ன
விஷயம் இனியன்? எதுக்காக இங்கே வரச் சொன்ன?” என்று கேட்டவளிடம்,
“என்ன
ஷாரூ… குடும்பமா சேர்ந்து என்னை கலாய்க்கறதுக்காகத் தான் இங்கே
வந்தீங்களா?” என்றான் இனியன்.
அவளோ சிரிப்பை
அடக்கிய பாவனையுடன், “ஏன்! உன்னை கலாய்க்கறதுக்கு எனக்கு உரிமை இல்லையா?”
என்றவள்,
“இதுதான்
நீ பேசணும்னு சொன்ன முக்கியமான விஷயமா? உருப்படியா ஏதாவது பேசுவேன்னு
பார்த்தா, சொன்னதையே சொல்லிட்டு இருக்க!” என்றவள், வீட்டிற்குள் செல்ல எத்தனிக்கவும் அவளது கரம்
பற்றி தடுத்து நிறுத்தியவன்,
“உடனே!
வீரநடை போட்டு கிளம்பிடுவியே” என்றபடி,
“பார்கவி
அண்ணியைப் பத்தி பேசத் தான் கூப்பிட்டேன்” என்றான்.
“நானே
கேட்கணும்னு தான் நினைச்சேன் இனியன். செழியன் மாமாவையும் அக்காவையும்
எப்படி பேச வைக்கிறது?” என்று ஷாரதா கேட்க,
“நான்
போய் அண்ணனை ரெடியா இருக்கச் சொல்லுறேன். நீ அண்ணியை அவரோட ரூமுக்கு
கூட்டிட்டு வந்துரு” என்றான்.
“நான்
கூப்பிட்டா அவ வரமாட்டா இனியன்!” என்று அவள் கூற, சில நொடிகள் யோசித்தவன்,
“சரி…
இன்னும் கொஞ்ச நேரத்துல நானே வந்து ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அண்ணியை,
செழியன் அண்ணனோட ரூமுக்கு வர வைக்கிறேன். நீ அவங்களை
மேலே இருக்கற பால்கனிக்கு மட்டும் எப்படியாவது கூட்டிட்டு வந்துரு ஷாரூ” என்றான்.
ஷாரதாவும்
அவன் சொன்னதற்கு சம்மதித்தபடி வீட்டிற்குள் சென்றாள்.
பார்கவியின்
அருகே அமர்ந்தவள், சிறிது நேரம் மௌனமாக அமர்ந்திருக்க, “ஏன் அமைதியா இருக்க
ஷாரூ?” என்று கேட்டாள் பார்கவி.
“நீதான்
இங்கே வந்ததுல இருந்து எதுவுமே பேசாம அமைதியா இருக்க. அதான் நானும்
போரடிச்சு போய் உட்கார்ந்திருக்கேன்” என்று ஷாரதா கூற,
“எனக்கு…
செழியனை ஃபேஸ் பண்ண தயக்கமா இருக்கு ஷாரூ! அவரை
சந்திச்சா மறுபடியும் எங்களுக்குள்ள ஏதாவது சண்டை வந்துருமோன்னு பயமா இருக்கு”
என்றவள்,
“எனக்கு
மேக்கப் புக்கிங் இருக்குன்னு சொல்லி பேசாம இங்கிருந்து கிளம்பி போயிரலாமான்னு தோணுது”
என்றாள், கமறிய குரலில்.
பார்கவியின்
கரம் பற்றி அவளை ஆசுவாசப்படுத்திய ஷாரதாவோ,
“எனக்குத் தெரிஞ்ச பார்கவி அக்கா பிரச்சனையைப் பார்த்து ஓடி ஒழியுற ஆள்
இல்லையே! இப்போ ஏன் இவ்வளவு தயங்குற?” என்றவள்,
“சரி
அதை விடு! இப்படியே உட்கார்ந்து ஏதாவது யோசிச்சுட்டு இருந்தா
உனக்கு தலைவலி வந்துரும். என்கூட வா” என்று
பார்கவியை அழைத்தாள்.
“என்னை
எங்கே கூப்பிடுற ஷாரதா?” என்றவளுக்கு பதில் கூறாமல் அவளது கரம்
பற்றி எழுப்பி, பார்கவியை மேலே இருந்த பால்கனிக்கு, இனியன் சொன்னபடியே அழைத்துச் சென்றாள்.
“ஏய்!
இங்கே எதுக்குடி என்னை கூட்டிட்டு வந்த?” என்று
கேட்டவளிடம்,
“இங்கே
விதவிதமான செடிகள் எல்லாம் வச்சிருக்கறதா இனியன் சொன்னான். அதான்
உன்னை கூட்டிட்டு வந்தேன்” என்றாள் ஷாரதா.
சுற்றி முற்றி
பார்த்தவளுக்கு அந்த பால்கனியில் படர்ந்திருந்த மணி ப்ளான்டை (Money plant) தவிர,
வேறெதவும் ஸ்பெஷலாக இருப்பதாகத் தெரியவில்லை.
தன் தங்கையை
சந்தேகமாப் பார்த்தவளோ, “ஷாரதா… உண்மையைச் சொல்லு. எதுக்காக
என்னை இங்கே கூட்டிட்டு வந்த?” என்று பார்கவி கேட்க, அவளோ மொனமாகவே நின்றிருந்தாள்.
“எனக்கு
நீ பண்ணுறது எதுவும் சரியா படல ஷாரதா. நான் கீழே போறேன்”
என்றபடி அங்கிருந்து செல்ல எத்தனித்தவளின் முன்னால் வந்து நின்றான் இனியன்.
“அண்ணி!
ஒரு நிமிஷம்” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள்,
திரும்பி புரியாமல் ஷாரதாவைப் பார்க்க, அவளோ ஒன்றும்
பேசாமல் மொனம் காத்து நின்றாள்.
“அண்ணி!
தயவு செஞ்சு எனக்காக ஒரு தடவை வந்து அண்ணனைப் பாருங்களேன். செழியன் அண்ணன் நேற்றிலிருந்து உங்களை நினைச்சு ஃபீல் பண்ணி, அந்த ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்குறாங்க. நான் கூப்பிட்டு
பார்த்தப்போ கூட வெளியே வரல” என்று இனியன் கூற, பார்கவியின் கண்கள் குளமாகின.
“ப்ளீஸ்
அண்ணி! எனக்காக ஒருமுறை வந்து அண்ணனைப் பாருங்க” என்று இனியன் மீண்டும் அவளிடம் கூற,
“சாரி
இனியன்! இந்த விஷயத்துல மட்டும் என்னை கட்டாயப்படுத்தாதீங்க.
ஐ ஆம் சாரி” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல
எத்தனித்தாள்.
அப்பொழுது
அந்தத் தளத்தில் இருந்த ஒரு அறையில் இருந்து ஏதோ கீழே விழுந்து நொறுங்குவது போன்று
சத்தம் கேட்கவும், “செழியன் அண்ணாவோட ரூம்ல இருந்து தான் சத்தம் வருது. என்னாச்சுன்னு
தெரியலையே” என்றபடி இனியன் பதட்டமானான்.
அவன் சொன்னதைக்
கேட்ட பார்கவியை பயம் வந்து முழுதாக ஆக்கிரமிக்க, அப்படியே உறைந்து போய் நின்றிருந்தாள் அவள்.
ஆனால், அவள் அவ்வாறு நின்றது என்னவோ
ஓரிரு நொடிகள் தான். அந்தச் சொற்ப வினாடிகளுக்குள் தன்னை சமன்
செய்து கொண்டவள், வேறு யாரும் அந்த அறைக்குள் செல்வதற்கு முன்பாகவே
முந்திக் கொண்டு அரண் செழியன் இருந்த அறைக்குள் நுழைந்தாள்.
அறைக்கதவை
திறந்து கொண்டு உள்ளே நுழைந்த பார்கவி,
அங்கு கண்ட காட்சியில் அதிர்ந்து போய் நின்றாள்.
கீழே ஒரு
கண்ணாடி டம்ப்ளர் உடைந்து சிதறியிருக்க,
அதற்கு அருகில் செழியன் சுயநினைவின்றி விழுந்து கிடந்தான்.
அதைக் கண்டதுமே, “ஐயோ… செழியன்!” என்றபடியே அவனிடம் ஓடியவள், அவனருகே அமர்ந்து செழியனின் தலையைத் தனது மடி மீது கிடத்தினாள்.
அவனது இமைகள்
மயக்கத்தில் சொருகிக் கிடக்க,
அரண் செழியனின் கன்னங்களில் வேகமாகத் தட்டியவள், “செழியன்… செழியன்… என்னாச்சு செழியன்
கண் திறந்து பாருங்க” என்றாள் குளம் கட்டிய கண்களுடன்.
அவனிடமிருந்து
எந்த பதிலும் வராமல் போகவும்,
அப்பொழுது தான் அவனது உடம்பிலிருந்து வெளியேறிய சூட்டை கவனித்தவள்,
செழியனின் நெற்றியில் தனது புறங்கை வைத்துப் பார்த்தாள்.
அவனது உடல்
அனலாய் கொதிப்பது தெரிய, தன்னருகே வந்து அமர்ந்த இனியனிடம், “செழியனை உடனே ஹாஸ்பிட்டலுக்கு
கூட்டிட்டு போகணும். அவருக்கு காய்ச்சல் அதிகமா இருக்கு”
என்று கூற, இனியனும்,
“இதோ
இப்போ போயிடலாம் அண்ணி!” என்றான்.
அதற்குள்
இவர்களின் சத்தம் கேட்டு, கீழே இருந்து அனைவரும் மேல் தளத்திற்கு ஓடி வந்தனர்.
அரண் செழியனின்
நிலையைக் கண்டதும், “ஐயோ! செழியனுக்கு என்னாச்சு?” என்று
ஆதிரை செல்வி பதட்டமாக,
“அண்ணனை
உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்மா” என்றான் இனியன்.
அப்பொழுது
ஷாரதா எதையோ கவனித்தவளாய், “இனியன்! மாமாவோட கையில பாரு… ரத்தம்
வருது!” என்று கூற, பார்கவி அவனது கையை
உடனே ஆராய்ந்தாள்.
வெட்டு காயம்பட்டு
கட்டு போடப்பட்டிருந்த இடத்தில் இருந்து குருதி கசிந்தது அவனுக்கு.
அதைக் கண்டவள்
மேலும் பதட்டமானபடி, “ஐயோ… ரத்தம் நிறைய வருது. சீக்கிரம்
ஏதாவது பண்ணுங்க” என்றாள்.
இனியனோ, செழியனைத் தனது இரு கரங்களால்
தூக்க, மாதேஷூம் ராஜேஷூம் அவனுக்கு உதவிக்கு வந்தனர்.
மூவரும்
சேர்ந்து செழியனைத் தூக்கிக் கொண்டு கீழே வந்தனர். உடனடியாக அவர்கள் காருக்கு அவனை தூக்கிச் செல்லவும்,
கொஞ்சம் கூட தாமதிக்காமல் காரின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்தாள் பார்கவி.
அவளது மடி
மீது செழியனை படுக்க வைத்த இனியன்,
ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமர, “நீயும் நம்ம இனியன்
கூட போம்மா. நாங்க பின்னாடியே வர்றோம்” என்று ஷாரதாவிடம் கூறினார் சண்முகநாதன்.
அவளும் அவரிடம்
சரியென்று தலையசைத்தபடி காருக்குள் ஏறி அமர,
இனியன் மருத்துவமனை நோக்கி காரை வேகமாக இயக்கினான்.
மருத்துவமனை
செல்லும் வரை, பார்கவி செழியனின் முகத்தில் இருந்து பார்வையை அகற்றவே இல்லை.
விழிகளில்
இருந்து வழிந்தோடிய கண்ணீரை துடைக்கக் கூட மறந்தவளாக, ‘என்னை மன்னிச்சிருங்க செழியன்.
உங்களோட இந்த நிலமைக்கு நானும் ஒரு காரணமாயிட்டேன்’ என்று மானசீகமாக அவனிடம் மன்னிப்பு கோரினாள்.
அரணாய் வருவான்…
மீண்டும்
சந்திப்போம்!
பிரியமுடன்,
சௌஜன்யா…
- Get link
- X
- Other Apps
Comments
மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியா போயிருமா அம்மா பரதேவதயே 😏😏😏
ReplyDeleteஅதானே🫣😃
Delete