Ongoing Novels

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 9

Image
  அரணாய் நீ வா ! பாகம் 2   அத்தியாயம் – 9 இப்படியே ஒரு வாரம் கடந்திருக்க , அரண் செழியனையும் பார்கவியையும் தனது வீட்டிற்கு விருந்திற்காக அழைத்திருந்தார் MLA கனகரத்தினம் . செழியனுக்கோ , அவரது வீட்டிற்கு செல்வதில் துளியளவும் விருப்பமில்லை . ஆனால் , தானும் அதே ஊரில் பணி செய்வதால் , கனகரத்தினத்தை பல்றேு சூழல்களில் சந்திக்க வேண்டி வரும் என்று நினைத்து அவரது வீட்டிற்குச் செல்ல ஒப்புக் கொண்டான் . நண்பகல் பன்னிரெண்டு மணியளவில் , கனகரத்தினத்தின் வீட்டிற்குச் சென்றனர் இருவரும் . அவனது புல்லட் சத்தம் கேட்டு வெளியே வந்த ஜீவானந்தம் , “ வாங்க வாங்க சார் ! நம்ம ஐயா உங்களை எதிர்பார்த்து தான் காத்துகிட்டு இருக்காங்க ” என்றான் . அரண் செழியனும் அவனிடம் சரியென்று தலையசைத்து , பார்கவியுடன் சேர்ந்து அவரது வீட்டிற்குச் சென்றான் . அந்த வீடே ஒரு மாளிகை போன்று பெரிதாகவும் , பிரம்மாண்டமாகவும் இருந்தது . ஹாலில் இருந்த பெரிய சோஃபாவில் கனகரத்தினம் அமர்ந்திருக்க , “ வணக்கம் சார் !” என்றபடியே அவரை நோக்கி சென்றான் செழியன் . அவரோ , “ வணக்கம் தம்பி ! வாங்க வாங்க !” என்றவர் , அவனருகே நின்ற பார்க

அரணாய் நீ வா - Epi 15

 அரணாய் நீ வா!


 

அத்தியாயம் – 15

மறுநாள் காலை

வணக்கம்!

சற்று முன்னர் கிடைத்த அண்மைச் செய்தி.

களக்காடு கான்டிராக்டர் செல்வன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது!

நேற்றிரவு நடந்த தேடுதல் வேட்டையில், கோவில்பட்டியில் வைத்து ப்ளேடு சேகர் என்ற ரவுடியை அதிரடியாகக் கைது செய்தது காவல்துறை.

இதுவரை இவ்வழக்கில் மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், இன்னும் சற்று நேரத்தில் மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

ரவுடி சேகர் மற்றும் அவனது கூட்டாளிகளை அதிரடியாகக் கைது செய்த களக்காடு காவல்நிலைய ஆய்வாளர் அரண் செழியன் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இப்படியான ப்ரேக்கிங் நியூஸ் அனைத்து முக்கிய செய்தி சேனல்களிலும் ஔிபரப்பாகிக் கொண்டிருக்க, தொலைக்காட்சியில் காட்டப்பட்ட அரண் செழியனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பார்கவி.

களக்காட்டில் இருந்து கிளம்பி வந்ததில் இருந்து அவனிடம் அவள் பேச முயற்சிக்கவில்லை. பேருந்தில் வைத்துப் பேசியதோடு சரி!

அதன் பிறகு, தன் மனதை வாட்டி வதைத்தக் கேள்விகளுக்கு விடை காண முடியாமல் தனது அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தவள், காலையில் தான் தேநீர் அருந்துவதற்காக ஹாலுக்கு வந்தாள்.

காலையில் குடும்பமாக அமர்ந்து அனைவரும் செய்தி பார்த்துக் கொண்டிருக்க, செழியனைப் பற்றிய செய்தியைக் கண்டதும், “நம்ம மாப்பிள்ளையை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு வேணிஎன்று தன் மனைவியிடம் கூறினார் சுகுமார்.

ஆமாங்க! போலீசா இருக்கறதுக்கே ஒரு தனி தைரியம் வேணும். நம்ம பொண்ணு குடுத்து வச்சவ தான்என்று நீலவேணி கூற, பார்கவிக்கோ அவள் அருந்திக் கொண்டிருந்த தேநீர் தொண்டைக்குள் இறங்க மறுத்தது.

முன்தினம் மருத்துவமனையில் நிகழ்ந்தவை அனைத்தும் அவள் மனக்கண் முன்பு தோன்றி மறைய, பெருமூச்சு விட்டபடி தேநீரை அருந்தினாள்.

மாப்பிள்ளைக்கு கையில அடிப்பட்டிருந்துச்சேம்மா. இப்போ வலியெல்லாம் எப்படி இருக்காம்?” என்று பார்கவியிடம் சுகுமார் விசாரிக்க,

ஏதோ யோசனையில் இருந்தவள், “ஆங்என்னப்பா கேட்டீங்க?” என்றாள்.

ஷாரதாவோ அவளது மனநிலை உணர்ந்தவளாய், அந்த சமயத்தில் தன் அக்காவிற்கு உதவியாக வந்தாள்.

மாமாவுக்கு இப்போ பரவாயில்லையாம்பா. காலையில தான் இனியன்கிட்ட பேசுனேன்!” என்று அவள் பதில் கூற,

பாவம்ங்க நம்ம மாப்பிள்ளை. காயம்பட்ட கையோட ரெஸ்ட் கூட எடுக்காம ஓடிட்டு இருக்காரு. மதியம் போல அவருக்கு ஃபோன் பண்ணி எப்படி இருக்கார்? என்ன ஏதுன்னு விசாரிங்க!” என்று தன் கணவரிடம் கூறினார் நீலவேணி.

அவரும் அதற்கு சரியென்று பதிலளிக்க, பார்கவி எழுந்து மீண்டும் தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

அவளை பின்தொடர்ந்து அதே அறைக்குள் சென்றாள் ஷாரதா. கட்டிலில் அமர்ந்தபடி, ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தவளை, “அக்கா!” என்று அவள் அழைக்கவும், தன் தங்கையை நிமிர்ந்து பார்த்தாள் பார்கவி.

ஏன்கா ரொம்ப டல்லா இருக்க?” என்று கேட்ட ஷாரதாவிற்கு பெருமூச்சையே பதிலாக அளித்தாள் அவள்.

பார்கவியின் கரம் பற்றியவளோ, “உன் மனநிலை எனக்குப் புரியுதுக்கா. செழியன் மாமா ரொம்ப நல்லரு. அவரை கல்யாணம் பண்ணிகிட்டா உன் லைஃப் நிச்சயம் நல்லா இருக்கும்!” என்று கூற, தன் தங்கையின் கரத்தை தன் கையில் இருந்து விலக்கியவள், அவளை நிமிர்ந்து பார்த்தபடி,

செழியனும் நானும் பிரிஞ்சுட்டோம்னா உன் கல்யாணம் தடைப்பட்டுருமோன்னு யோசிக்குறியா ஷாரதா!” என்றவள் சிறு இடைவெளி விட்டு,

கவலைப்படாதஎன்னால உனக்கும் இனியனுக்கும் நடக்கப் போற கல்யாணத்துல எந்தப் பிரச்சனையும் வராம நான் பார்த்துக்குறேன்என்றாள்.

ஐயோ! நான் அதுக்காக சொல்லலை. நீ இப்போ மாமா மேல கோவத்துல இருக்க. கோவத்துல எடுக்கற முடிவு என்னைக்குமே சரியா இருக்காது. நீ வீணா ஏதேதோ கற்பனை பண்ணிட்டு தேவையே இல்லாமல் மாமாவை தண்டிக்குற!”

எதுவா இருந்தாலும் ஒரு தடவைக்கு இரண்டு முறை நல்லா யோசிச்சு முடிவெடுக்கா. ஏன்னாஇது உங்க இரண்டு பேரோட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். அவ்வளவு தான் நான் சொல்லுவேன்!” என்று கூறிவிட்டு, அந்த அறையில் இருந்து வெளியேறினாள் ஷாரதா.

அவள் பேசிச் சென்ற வார்த்தைகள் பார்கவியின் மனதை அழுத்தியது.

செழியனின் மீது தான் கொண்ட நேசத்தினால் தான் அவனை போலீஸ் வேலையில் இருந்து விலகச் சொல்கிறோம் என்கிற விஷயத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லையே! என்று நினைத்து பெருமூச்சுவிட்டபடி கட்டிலில் சாய்ந்து விழி மூடினாள் அவள்.

அதே நேரம் சேகரையும், மற்ற இரண்டு குற்றவாளிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினான் அரண் செழியன்.

வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த பதினைந்து நாட்களுக்கு மூவரையும் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

கோர்ட் விஷயங்கள் அனைத்தையும் முடித்துக் கொண்டு வெளியே வந்த அரண் செழியனுக்கு எஸ்.பி வேலாயுதத்திடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்றவனிடம், “வெல்டன் செழியன்! சரியான ப்ளானோட குற்றவாளிகளை அரெஸ்ட் பண்ணி கோர்ட்ல ஒப்படைச்சிருக்கீங்க. வாழ்த்துகள்!” என்று அவர் மகிழ்வுடன் கூற,

தாங்க் யூ சார்! நான் என்னோட கடமையை தான் சார் செஞ்சேன்என்றவன் தொடர்ந்து,

ஆனா, இந்த கேஸ் இவங்களோட மட்டும் நிற்கப் போறதில்ல சார். இதில் இன்னும் ஆழமா சில விஷயங்களைப் பற்றி விசாரணை நடத்த வேண்டி இருக்குஎன்றான்.

விசாரணை எல்லாம் பொறுமையா பண்ணிக்கலாம் செழியன். முதல்ல உங்க ஹெல்தைப் பாருங்க. கொஞ்ச நாள் லீவ் போட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க. உடம்பு முழுசா சரியான அப்புறம் இந்தக் கேஸ் பத்தின அடுத்தக்கட்ட விசாரணையைத் தொடங்கலாம்என்று வேலாயுதம் அவனிடம் கூற,

ஷ்யூர் சார்! அப்போ நான் வச்சுடறேன்என்று அவருக்குப் பதில் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அரண் செழியன்.

தன்னருகே நின்றிருந்த சுயம்புலிங்கத்திடம், “நம்ம டீம் எல்லாருக்கும் இன்னைக்கு லீவ் கொடுத்துரலாம் ஏட்டய்யா. நீங்களும் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுங்கஎன்று செழியன் கூற,

எல்லாரும் போயிட்டா ஸ்டேஷனை யார் சார் பார்த்துக்கறதுஎன்று கேட்டார் அவர்.

செழியனோ, “அதான் நம்ம ஜெகன் சார் இருக்காருல்ல. அவர் பார்த்துப்பார்என்றபடி தூரத்தில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்த ஜெகனை அழைத்தான்.

அவர் வந்ததும், “நேத்து அக்யூஸ்டை பிடிக்கப் போன எல்லாரும் இன்னைக்கு லீவ். நீங்க தான் ஸ்டேஷனைப் பொறுப்பா பார்த்துக்கணும்என்றான்.

அதைக் கேட்டதும் அதிர்ந்து போன சப்-இன்ஸ்பெக்டர் ஜெகன், “சார்! நான் எப்படி சார் தனியா பார்த்துக்கறது? அதுவும் இல்லாம நேத்து நைட் முழுக்க, விடிய விடிய ஸ்டேஷன்லேயே தான் உட்கார்ந்திருந்தேன். இன்னும் வீட்டுக்கு கூடப் போகல சார். காலையில் இருந்து என் வைஃப் கால் மேல கால் பண்ணிட்டு இருக்காங்க சார்என்றார்.

அதைக் கேட்டதும், ‘உஃப்என்று பெருமூச்சு விட்டவன், “ஏன்? எங்களுக்கெல்லாம் குடும்பம் இல்லையா! நேத்து நைட் ஒரு முக்கியமான ஆப்பரேஷன் முடிச்சுட்டு வந்திருக்கோம்என்று சற்று காட்டமாகப் பேசியவன் பின்னர் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு,

இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க சார். வேணும்னா ஒரு இரண்டு மணிநேரம் ரெஸ்ட் எடுத்துட்டு டியூட்டிக்குப் போங்க. ஸ்டேஷன்ல உங்களுக்கு உதவியா இரண்டு பி.சியை வரச் சொல்லிடுறேன்என்று கூறிவிட்டு அவரது பதிலுக்குக் காத்திராமல்,

ஏட்டய்யாபோகலாம்என்றபடி அவருடன் அங்கிருந்து சென்று விட்டான்.

செழியனின் முதுகையே வெறித்துப் பார்த்தபடி ஒன்றும் செய்ய முடியாமல் தன் கோபத்தை மறைத்து நின்றிருந்தார் ஜெகன்.

அங்கிருந்து கிளம்பிய செழியன், காவல் நிலைய வாகனத்திலேயே தனது வீட்டை வந்தடைந்தான்.

வாகனத்தில் இருந்து இறங்கியவன், “சரி ஏட்டய்யா! பார்த்துப் போங்க!” என்று கூறி சுயம்புலிங்கத்திடம் விடைபெற்று, உள்ளே சென்றான்.

அவனுக்காகவே காத்துக் கொண்டிருந்தது போல, வாசலில் நின்றிருந்தார் அவனது தாய் ஆதிரை செல்வி.

செழியன் கண்ணா!” என்றபடி வேகமாகச் சென்று தன் மகனின் கன்னத்தை வருடியவர், வருத்தத்துடன் அவனது தோள்பட்டையில் இருந்த காயத்தைப் பார்த்தபடி, “வலிக்குதாப்பா?” என்று கேட்க,

அவனோ சிறு புன்முறுவலுடன், “உங்களைப் பார்த்ததும் வலியெல்லாம் பறந்து போச்சும்மா!” என்றான்.

அதே நேரம், சண்முகநாதனும் இனியனும் அங்கே வந்தனர்.

தன் மகனை ஆரத்தழுவிய சண்முகநாதன், “சாதிச்சுட்ட செழியா! உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குப்பாஎன்றார்.

அவரிடம், “தேங்கஸ்பா!” என்று சிரித்தபடியே செழியன் பதில் கூற, “அண்ணா! எனக்கு எப்போ ட்ரீட் வைக்கப் போற?” என்று கேட்டான் இனியன்.

அவனது தோள் மீது கை போட்டு, “உன்னோட லவ் வீட்ல ஓகே ஆனதுக்கே நீ இன்னும் எனக்கு ட்ரீட் தரல தம்பி! ஞாபகம் இருக்குல்ல?” என்றான் அவன்.

இனியனோ, “சரி சரி! எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா ஒரு நாள் ட்ரீட் வச்சு கொண்டாடிரலாம் விடு!” என்று கூற, செழியனும் சிரித்தபடியே சரியென்று தலையசைத்தான்.

இவர்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில் வீட்டிற்குள் சென்ற ஆதிரை, ஆரத்தி கரைத்து எடுத்து வந்து செழியன் முன்பு நிற்க, “எதுக்கும்மா இதெல்லாம்?” என்று கேட்டான் அவன்.

சும்மா இரு செழியா. நீயே ஒரு பெரிய கண்டத்துல இருந்து தப்பிச்சு வந்திருக்க! இன்னையோட உன்னை பிடிச்ச பீடை எல்லாம் ஒழிஞ்சு போகட்டும்என்றபடி அவனுக்கு ஆரத்தி சுற்றி வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

வீட்டிற்குள் வந்தவன் சோர்வாக சோஃபாவில் அமர, அவனது கையில் இருக்கும் காயத்தைப் பார்த்தபடி, “நேத்து டாக்டர் பேச்சையும் மீறி கிளம்பிப் போயிட்ட. இன்னைக்கு போய் காயம் எப்படி இருக்குன்னு டாக்டர்கிட்ட காட்டிட்டு வந்துரலாம்ணாஎன்றான் இனியன்.

அவன் சொல்றதும் சரிதான் செழியா! இந்தக் கையோட ரெஸ்டே இல்லாம ராத்திரி முழுக்க வேலை பார்த்திருக்க. எதுக்கும் டாக்டரை போய் பார்த்துட்டு வந்துரலாம்என்றார் சண்முகநாதன்.

ஆதிரை மூவருக்கும் காஃபி தயாரித்து எடுத்து வந்துக் கொடுக்க, அதை வாங்கிப் பருகிய அரண் செழியன், “ஹாஸ்பிட்டல் போகணும்பா. ஆனா, இங்கே வேண்டாம். மதுரைக்குப் போய் பார்த்துக்கலாம்என்றான்.

அப்படின்னா டியூட்டிக்கு லீவ் போட்டிருக்கியா செழியா?” என்ற தன் தந்தையிடம், “ஆமாப்பா! இரண்டு வாரத்துக்கு சிக் லீவ் போட்டிருக்கேன். நாம இன்னைக்கே மதுரைக்கு கிளம்பிடலாம்என்றான்.

அதுவும் நல்லது தான் செழியா. உன்னை இங்கே எப்படி தனியா விட்டுட்டு போறதுன்னு நானும் வருத்தப்பட்டுட்டே இருந்தேன். இப்போ தான்பா என் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்குஎன்றார் ஆதிரை.

அப்போ நான் மதுரைக்கு கார் புக் பண்ணிடவாண்ணா?” என்று கேட்ட இனியனிடம், சரியென்று தலையசைத்தவன் எழுந்து ஓய்வெடுப்பதற்காக தனது அறைக்குச் சென்றான்.

சட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டிவிட்டு, கட்டிலில் அமர்ந்தவன் தனது அலைபேசியை எடுத்துப் பார்த்தான்.

பார்கவியிடம் இருந்து எவ்வித அழைப்போ அல்லது குறுஞ்செய்தியோ, எதுவுமே வந்திருக்கவில்லை.

முன்தினம் மருத்துவமனையில் அவள் பேசிச் சென்ற வார்த்தைகள் அவனது காதிற்குள் மீண்டும் ஒலிப்பது போன்றிருந்தது.

எனக்கு பீஸ்ஃபுல்லான ஒரு லைஃப் தான் வேணும்என்று அவள் சொன்னது அவனது மனதைப் பிசைய, அடுத்த கணமே பார்கவியின் எண்ணுக்கு அழைத்து விட்டான்.

மறுபுறம், தனது கைகளில் இருந்த அலைபேசியில் பார்வை பதித்தவாறு, தொடுதிரையில் ஔிர்ந்த செழியனின் பெயரையே பார்த்துக் கொண்டிருந்தாள் பார்கவி.

பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர, அவனது அழைப்பை ஏற்றாளில்லை!

அவன் அழைக்கிறான் என்றதுமே, செழியனிடம் பேசிவிட வேண்டுமென்று அவளது மனம் தவியாய் தவித்ததென்னவோ முற்றிலும் உண்மை தான்.

ஆனால், தான் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்கிற பிடிவாத குணம், அவளது காதலை முன்நோக்கி செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியது.

இரண்டு முறைகள் முழுமையாக செழியனிடம் இருந்து அழைப்பு வந்த போதிலும், அதை ஏற்காமல் விட்டு விட்டாள் அவள்.

மற்றொரு புறம், செழியனுக்கு மனம் வலித்தது. கையில் பட்ட காயத்தை விட, இப்பொழுது இந்த காதல் தரும் காயம் அவனுக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது.

அவன் ஒரு காவல்துறை அதிகாரி தான் என்ற போதிலும், தனது ஈகோ விடுத்து பார்கவியின் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினான்.

மறுபுறம் மெசேஜ் ஒலி கேட்டு, ஃபோனை திறந்து குறுஞ்செய்தியைப் பார்த்தாள் பார்கவி.

அதில், ‘பாரூபேசுடி!’ என்றிருந்த செய்தியைப் பார்த்ததுமே அவளுக்கு அழுகைப் பொங்கி வந்து விட்டது.

கரைப்புரண்டு ஓடும் வெள்ளத்தை அடக்க முடியாதல்லவா!

அதே போன்று இவளது மனதிலும் அவன் மீதான காதல் கரைப்புரண்டு ஓட, அந்தக் காதல் தந்த காயத்தின் பலனாய் பொலபொலவென கண்ணீர் விடலானாள்.

ஏனென்று புரியாமல் ஏங்கி ஏங்கி அழுதாள். முழுதாக ஐந்து நிமிடங்கள் செழியனை நினைத்து அழுது கரைந்தாள்.

ஒருவாறு கண்ணீர் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு, மீண்டும் தனது அலைபேசியைக் கையில் எடுத்துப் பார்த்தாள் பார்கவி.

மீண்டும் செழியனிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.

பேசமாட்டியா பாரூஎன்மேல கோவமா இருப்பேன்னு தெரியும். ஆனா, எனக்கு உன்மேல எந்தக் கோபமும் இல்ல. உன்னை ரொம்ப மிஸ் பண்ணுறேன்மா. இன்னைக்கு நைட் மதுரைக்கு கிளம்பி வர்றேன். பை! லவ் யூஎன்று எழுதப்பட்டிருந்த அந்தக் குறுஞ்செய்தியைப் படித்தவளின் விழிகளில் மீண்டும் கண்ணீர்.

அலைபேசியை தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அழுகையுடன் கூடவே, செழியனின் நினைவுகளில் மூழ்கிப் போனாள் அவள்.

மதியத்திற்கு பிறகு களக்காட்டில் இருந்து கிளம்பிய அரண் செழியன் மற்றும் அவனது குடும்பத்தினர், அன்றிரவு மதுரையை வந்தடைந்தனர்.

வீட்டிற்கு வந்ததுமே சோர்வாக இருந்ததால், செழியன் உறங்குவதற்காக தனது அறைக்குச் சென்று விட்டான்.

ஆதிரை செல்வியும் சண்முகநாதனும் கூட தங்கள் அறைக்குச் சென்றிருக்க, இனியன் அலைபேசியுடன் மொட்டை மாடிக்குச் சென்றான்.

தனது எண்ணில் இருந்து அவன் ஷாரதாவிற்கு அழைக்க, இரண்டாவது ரிங்கிலேயே அழைப்பை ஏற்று விட்டாள் அவள்.

ஹலோ! இனியன். ஊருக்கு வந்தாச்சா?” என்று ஷாரதா கேட்க,

இப்போ தான் வந்தோம் பேபி! வந்ததும் உனக்குத் தான் கால் பண்ணுறேன்என்றான் அவன்.

சரி சரி! செழியன் மாமா எப்படி இருக்காங்க. காயம் எல்லாம் ஆறிடுச்சா?” என்று கேட்டவளிடம்,

இப்போ கொஞ்சம் பரவாயில்ல ஷாரூ. ஆனா, அண்ணா ரொம்ப டல்லா இருக்காங்கஎன்றான் இனியன்.

இங்கேயும் அதே கதை தான். அக்காவும் ரூமுக்குள்ளேயே தான் அடைஞ்சு கிடக்குறா! இவ ஏன் தான் இப்படி வீம்பு பிடிச்சுட்டு இருக்காளோ தெரியலஎன்றவளிடம்,

நீ அண்ணிகிட்ட செழியன் அண்ணாவைப் பத்தி ஏதாவது பேசிப் பார்த்தியா?” என்று அவன் கேட்க,

ம்ம்ம்பேசினேன் இனியன். கேவத்துல எந்த முடிவும் எடுக்க வேண்டாம்னு நானும் என்னால முடிஞ்ச அளவுக்குப் பேசி பார்த்துட்டேன். ஆனா, அவ மனசு மாறின மாதிரி தெரியலஎன்றாள் ஷாரதா.

அதைக் கேட்ட இனியன் மௌனமாக இருக்க, “இப்போ என்ன பண்ணுறது இனியன். இப்படியே போன இவங்க இரண்டு பேரும் ஆளுக்கொரு திசையா போயிடுவாங்க போலிருக்கு!” என்று ஆற்றாமையில் அவள் பேச,

ஒண்ணு பண்ணு ஷாரூ. நாளைக்கு பார்கவி அண்ணியை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா!” என்றான் இனியன்.

உங்க வீட்டுக்கா? எதுக்கு?” என்று கேட்டவளிடம்,

இரண்டு பேரையும் நேர்ல சந்திச்சு பேச வச்சா அவங்க மனசு மாறும்னு எனக்குத் தோணுது. அதுக்காகத் தான் சொல்றேன்என்றான்.

ம்ம்ம்நீ சொல்ற ஐடியாவும் நல்லா தான் இருக்கு. ஆனா, நான் வான்னு கூப்பிட்டா அவ உடனே வந்துருவாளா?” என்ற ஷாரதாவிடம்,

நீ கூப்பிட்டா அவங்க மறுக்க வாய்ப்பிருக்கு! ஆனா, உங்க அப்பா சொன்னா மறுக்க முடியாதில்லையா?” என்றான் அவன்.

அப்பாவா?” என்றவளிடம்,

ஆமா! செழியன் அண்ணன் மதுரைக்கு வந்திருக்கற விஷயத்தை உங்க அப்பாகிட்ட சொல்லி, அண்ணனை நலம் விசாரிக்கப் போகலாம்னு எல்லாரையும் இங்கே கூட்டிட்டு வந்துரு. அப்போ பார்கவி அண்ணியும் இங்கே வந்து தானே ஆகணும். அண்ணி இங்கே வந்துட்டாங்கன்னாஎப்படியாவது அவங்க இரண்டு பேரையும் பேச வச்சுரலாம்என்றான் இனியன்.

அதைக் கேட்டதும் மகிழ்ந்து போன ஷாரதாவோ, “சூப்பர் இனியன்! நம்ம லவ் பண்ண ஆரம்பிச்சு, இத்தனை வருஷத்துல இப்போ தான் ஒரு நல்ல ஐடியா குடுத்திருக்க! கீப் இட் அப்என்று கூற,

அடிப்பாவி! போற போக்குல என்னை வஞ்சப்புகழ்ச்சி பண்ணுறியே! இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்என்றான்.

அவளோ சிரிப்பு மேலோங்கிய குரலில், “வஞ்சப்புகழ்ச்சியா? ச்சச்சநான் உன்னை பாராட்டினேன்பாஎன்றாள்.

சரி! அதெல்லாம் இருக்கட்டும். உனக்கு நல்ல ஐடியா எல்லாம் குடுத்திருக்கேன். எனக்கு எதுவுமே இல்லையா?” என்று குழைந்த குரலில் இனியன் அவளிடம் கேட்க,

சரி சொல்லு! உனக்கு என்ன வேணும்?” என்றாள் அவள்.

அதைக் கேட்டவனோ குதூகலமானபடி, “எனக்கு என்ன வேணும்னு உனக்குத் தெரியாதா பேபி! நாளைக்கு நம்ம வீட்டுக்கு வேற வரப் போற. சோ…” என்று இழுக்க,

சோ வாட்?” என்று குரலில் ஆர்வம் பொங்கக் கேட்டாள் அவள்.

எனக்கு ஸ்பெஷலா ஏதாவது தருவேன்னு எதிர்பார்க்கிறேன் ஷாரூஎன்றவனிடம்,

நிச்சயமா! நாளைக்கு நான் தரப் போற ஸ்பெஷல் கிஃப்ட்ல நீ அப்படியே மயங்கப் போறப் பாருஎன்று ஷாரதா கூற, அதைக் கேட்டு குதூகலமானவன் அவளிடம்பைசொல்லி, ஃபோனை வைத்துவிட்டு, பலவித கற்பனைகளோடும் கலர் கலர் கனவுகளோடும் தன் காதலியை நினைத்தபடியே உறங்கச் சென்றான்.

மறுநாள் பொழுது விடிந்ததுமே தன் தந்தையிடம் சென்று, இனியன் கூறியது போல அரண் செழியனை நலம் விசாரிக்க அவர்களது வீட்டிற்குச் செல்லலாம் என்று ஷாரதா கூற, அவருக்கும் அது சரியென்றே பட்டது.

வீட்டில் அனைவரும் தூக்கம் கலைந்து எழுந்ததும், இந்த விஷயத்தைப் பற்றி சுகுமார் அனைவரிடமும் கூற, பார்கவிக்குத் தான் அதிர்ச்சியாக இருந்தது.

தான் செழியனைப் பார்க்க வரவில்லை என்று இப்போது கூறினால், ஏன்? எதற்கு? என்கிற கேள்விகள் எழும் என்பதும், அதற்கு தன்னால் அவர்களிடம் சரியான பதில் கூற முடியாது என்பதும் அவளுக்கு நன்றாகவே தெரியும்.

வேறு வழியே இன்றி தன் தந்தை சொன்னது போலவே அரண் செழியனைப் பார்ப்பதற்காக அவர்களுடன் சேர்ந்து அவனது வீட்டிற்குக் கிளம்பிச் சென்றாள் அவள்.

அரணாய் வருவான்

மீண்டும் சந்திப்போம்!

பிரியமுடன்,

சௌஜன்யா

Comments

Post a Comment

Popular posts

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 5

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 2

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 4