Ongoing Novels

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 11

Image
  அரணாய் நீ வா ! பாகம் 2 அத்தியாயம் – 11 “ கார்த்திகேயனா ? உனக்கு நல்லா தெரியுமா சுபத்ரா !” என்று அதிர்ச்சி மாறாமல் கேட்ட அரண் செழியனிடம் , “ ஆமா சார் ! எனக்கு நூறு சதவீதம் உறுதியா தெரியும் . என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனது அவர் தான் ” என்றாள் சுபத்ரா . அதைக் கேட்டு பெருமூச்சு விட்டவன் , “ சரி ! சொல்லு சுபத்ரா . உனக்கு ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு என்ன நடந்தது ?” என்று செழியன் கேட்க , அவள் அந்தச் சம்பவத்தைப் பற்றி அவனிடம் விவரிக்க ஆரம்பித்தாள் . அன்று சுபத்ராவிற்கு மதியம் வரை மட்டுமே கல்லூரி இருக்க , தனது இருச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் . ரிஷியின் வீடு இருக்கும் இடத்தைக் கடந்து தான் அவள் தனது வீட்டிற்குச் செல்ல வேண்டும் . அந்த வீட்டை அவள் கடந்து சென்ற நேரத்தில் கேட்டை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தாள் ஒரு பெண் . முகம் முழுக்க வியர்த்துப் போயிருக்க , படபடப்பாகக் காணப்பட்டாள் அவள் . சுபத்ரா வருவதைக் கண்டதும் அவசரமாக கரம் நீட்டித் தடுத்து , வண்டியை நிறுத்தும்படி கூறினாள் . அந்தப் பெண்ணின் முகம் சுபத்ராவிற்கு பரிச்சயமாக இருக்கவும் , யோசனையுடன் சடன...

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 8

 அரணாய் நீ வா!

பாகம் 2


 

அத்தியாயம் – 8

இரண்டு மாதங்களுக்குப் பிறகு

லேசான சூரிய வெளிச்சம் ஜன்னல் வழியாக அந்த அறைக்குள் பரவிய வேளையில், அலாரத்தின் மணியோசை கேட்டு உறக்கம் கலைந்து எழுந்தான் அரண் செழியன்.

கட்டிலில் படுத்தவாறே சோம்பல் முறித்தவன், திரும்பிப் பார்த்த போது படுக்கை காலியாக இருந்தது. புன்னகையுடன் கட்டிலைவிட்டு எழுந்தவன், தன் மனைவியைத் தேடிச் சென்றான்.

இன்றுடன் அவனுக்கும் பார்கவிக்கும் திருமணம் முடிந்து பத்து நாட்கள் ஆகியிருந்தன.

தங்கள் பெற்றோரிடம் சம்மதம் வாங்கியவன், திருமணத்தை அதிக ஆடம்பரம் இல்லாமல் நடத்த வேண்டும் என்று கூறிவிட்டான்.

அதன் பிறகு, மதுரையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர்களது சொந்தபந்தங்கள், காவல்துறை நண்பர்கள் என்று நிறைய பேர் கலந்து கொண்டனர்.

பார்கவியைத் திருமணம் முடித்து இதோ, இப்பொழுது அவளை களக்காட்டிற்கும் அழைத்து வந்துவிட்டான்.

திருமணத்திற்குப் பிறகு அவளுடன் வாழ்வது அவனுக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அறையைவிட்டு வெளியே வந்தவனை காஃபி மணம் சுண்டி இழுக்க, அரவம் எழுப்பாமல் சமையலறைக்குச் சென்றான்.

அங்கே தனக்காக காஃபி தயாரித்துக் கொண்டிருந்தவளைக் கண்டவன், மெல்ல நடந்து அவளை நெருங்கிச் சென்று சட்டென பின்னால் இருந்து அவளை அணைத்து, பார்கவியின் முதுகில் தலைசாய்த்துக் கொண்டான்.

முதலில் அவன் கட்டிக் கொண்ட போது, ஒருநொடி அதிர்ந்தவள் பின்னர் வெட்கத்துடன் தலைகவிழ்ந்து கொண்டாள்.

அவளது முதுகில் சாய்ந்து கண்கள் மூடியிருந்தவனின் கைகள், பார்கவியின் இடையை இறுக்கமாக அணைத்திருந்தன.

காலையிலேயே குளிச்சுட்டியா பாரூ?” என்று கேட்டவனிடம்,

ஆமா! ஏன் கேட்குறீங்க?” என்று ஹஸ்கி குரலில் அவள் கேட்க,

இல்ல! கமகமன்னு வாசமா இருக்க. அதான் கேட்டேன்என்றவன்,

இனிமே அவசரப்பட்டு இப்படி குளிகாத சரியா?” என்றான்.

அவளும் அதே குரல் மாறாமல், “ஏன்? இப்போ நான் குளிச்சதுல என்ன தப்பு?” என்று கேட்க,

நீ குளிச்சது தப்பில்லஆனா, என்னை விட்டுட்டு தனியா குளிச்சது தான் தப்புஎன்று அவன் கூற, அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது.

போங்க செழியன். அதெல்லாம் நான் தனியா தான் குளிப்பேன்என்று அவள் கூற, அவளை தன்புறமாகத் திருப்பியவன்,

ஹலோ மேடம்! நம்ம புதுசா கல்யாணமான ஜோடி! உங்களுக்கு அது ஞாபகம் இருக்கா இல்லையா?” என்று கேட்க,

அதுக்காக!” என்று புருவம் சுருக்கியவள், “எனக்கு இதெல்லாம் பழக்கமில்ல செழியன்என்றாள்.

சரிதான்நான் மட்டும் என்ன? தினமும் நாலு பேரோட சேர்ந்து குளிச்சுட்டா இருக்கேன்!” என்றவன், அவளது நாடியைப் பற்றி நிமிர்த்தி,

இனிமே எனக்காக பழகிக்கோ பாரூ. ப்ளீஸ்!” என்றவன் அவளை சட்டென அணைத்து, அவளது இதழில் ஆழ்ந்த முத்தமிட்டான்.

இப்படி அவன் அடிக்கடி தரும் அதிர்ச்சி முத்தங்கள் அவளுக்கு இப்போது கிட்டத்தட்ட பழகிப் போயிருக்க, அவனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து, தனது தேவைகளை தீர்த்துக் கொள்ளும் மனைவியாக மாறிப் போயிருந்தாள்.

இரு நிமிடங்கள் கழித்து உதடுகளுக்கு ஓய்வு கொடுத்தவன், அவளைப் பார்த்து புன்னகைக்க, பார்கவியை வெட்கம் ஆட்கொண்டது.

அவனது தோளில் அடித்தவள், “போய் ப்ரஷ் பண்ணிட்டு வாங்க. உங்களுக்காக காஃபி போட்டு வச்சிருக்கேன்என்றாள்.

அவனும் சரியென்று தலையசைத்தபடி, பல் துலக்கிவிட்டு வந்து அவள் போட்டுக் கொடுத்த காஃபியை அருந்தினான்.

பின்னர் காவல் நிலையம் செல்வதற்காகத் தயாராகி வந்தவனுக்கு சூடாக தோசையும், புதினா சட்னியும் பரிமாறினாள் பார்கவி.

உணவின் சுவை பிரமாதம் என்று அவளை பாராட்டியபடியே அவன் உண்டு கொண்டிருந்த வேளையில் அவனது அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

களக்காடு காவல் நிலையத்தில் இருந்து ஹெட் கான்ஸ்டபிள் சுயம்புலிங்கம் தான் அழைத்திருந்தார்.

ஹலோ!” என்று அழைப்பை ஏற்றவனிடம்,

ஹலோ சார்! நான் தான் சுயம்பு பேசுறேன்என்று அவர் பதில் கூற,

சொல்லுங்க ஏட்டய்யா! என்ன காலையிலேயே ஃபோன் பண்ணியிருக்கீங்க?” என்று செழியன் கேட்க,

சார்! நம்ம ஊர் ரேஷன் கடை பக்கத்துல இரண்டு கோஷ்டிக்கு நடுவுல தகறாருன்னு ஸ்டேஷனுக்கு ஒரு ஃபோன் வந்தது சார்என்றார் அவர்.

சரி! ஜெகன் சாரை நேரா ஸ்பாட்டுக்குப் போகச் சொல்லுங்க. நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கே கிளம்பி வர்றேன்என்று அவன் கூற,

ஜெகன் சார் இன்னைக்கு லீவ் போட்டிருக்கார் சார்! ஸ்டேஷன்ல நானும் இரண்டு கான்ஸ்டபிளும் தான் இருக்கோம்என்றார் சுயம்புலிங்கம்.

அதைக் கேட்டு சில நொடிகள் யோசித்தவன், “சரி! நான் உடனே கிளம்பி ஸ்பாட்டுக்குப் போறேன். நீங்க அவங்க இரண்டு பேரையும் நேரா அங்கே வரச் சொல்லிடுங்கஎன்றான்.

அதன் பிறகு, அழைப்பைத் துண்டித்தவன் உண்ணாமல் எழுந்து கைகழுவச் சென்றான்.

ஈரமான கையை பார்கவியின் சுடிதார் துப்பட்டாவில் அவன் துடைக்க, “ஏன் செழியன் பாதியிலேயே எழுந்துட்டீங்க? டிபன் நல்லா இல்லையா?” என்று கேட்டாள் அவள்.

டிபன் சூப்பர் பாரூஆனா, எனக்கு இப்போ உட்கார்ந்து சாப்பிட நேரமில்ல. ஒரு அவசர வேலையா நான் உடனே கிளம்பியாகணும். போயிட்டு வந்து உன்கூட சேர்ந்து மதிய சாப்பாடு சாப்பிடுறேன்என்று செழியன் கூற, அவளும் சரியென்று தலையசைத்தாள்.

வெளியே நிறுத்தியிருந்த புல்லட்டில் ஏறியவன், பார்கவியிடம் கையசைத்து விடைபெற்று அங்கிருந்து கிளம்பி நேராக ரேஷன் கடைக்குச் சென்றான்.

கடையைச் சுற்றி ஒரே கூட்டமாக இருக்க, நான்கைந்து ஆண்கள் ஒருவர் மற்றவரை தாக்கி கைக்கலப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.

பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு வேகமாக அவர்களிடம் சென்றவன், சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நடுவே போய் நின்று, அவர்களை பிரித்துவிட முயன்றான்.

எல்லாரும் முதல்ல சண்டையை நிறுத்துங்கஎன்று, அவன் சொன்னது அவர்களின் காதுகளில் விழுவது போலத் தெரியவில்லை.

தங்களுக்கு மத்தியில் ஒரு காவல்துறை அதிகாரி வந்திருப்பதைக் கூட உணராமல் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்களுடன் சேர்ந்து இன்னும் கூடுதலாக மூன்று பேர் வந்து அந்த சண்டையில் கலந்து கொள்ள, செழியனுக்கு அவர்களை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது.

தான் வரச் சொன்ன போலீசார் இன்னும் அங்கு வந்து சேரவில்லை என்றதும் என்ன செய்வது என்று சில நொடிகள் யோசனையுடன் நின்றிருந்தான் அவன்.

அப்பொழுது அந்த வழியாக ஒரு தண்ணி லாரி வரவும், அதை கைக்காட்டி நிறுத்தியவன், “வண்டியை ஓரங்கட்டுஎன்று வண்டி ஓட்டுனரிடம் கூறினான்.

அவனும் லாரியை ஒரமாக நிறுத்த, “டேங்க்ல குழாயை கனெக்ட் பண்ணி குடு!” என்று அந்த லாரி ஓட்டுனரிடம் செழியன் கூற,

சார்!” என்றபடி தயங்கினான் அவன்.

என்னய்யா சாரு மோருன்னு? அங்கே இத்தனை பேர் சண்டை போட்டுட்டு இருக்கறது உனக்குத் தெரியுதா இல்லையா? உன் தண்ணிக்கான காசை நான் தர்றேன். முதல்ல சொன்னதை செய்!” என்றான்.

அதன் பிறகே திருப்தியடைந்த அந்த டிரைவர், “சரிங்க சார்…” என்றபடி, அரண் செழியன் சொன்னபடியே தண்ணீர் டேங்குடன் குழாயை பொருத்தி அதை அவனிடம் கொடுத்தான்.

அந்தப் பெரிய குழாயை தனது கைகளில் ஏந்திக் கொண்டவன், “நான் சொல்லும் போது தண்ணியைத் திறந்து விடுஎன்று கட்டளை பிறப்பிக்க, அவன் சரியென்று பதில் கூறினான்.

பின்னர், அந்தக் கூட்டத்தை நோக்கி நடந்து சென்றவன், அங்கே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றவர்களை, “எல்லாரும் சீக்கிரமா இங்கிருந்து தள்ளிப் போங்கஎன்று கர்ஜனையானக் குரலில் கூறிக் கொண்டே முன்னேறினான்.

அவனது சத்தமான குரல் கேட்டு அங்கு நின்றிருந்தோர் வேகமாக நகர்ந்து செல்ல, சண்டையில் ஈடுப்பட்டிருந்த நபர்களை நோக்கி தண்ணீர் குழாயை உயர்த்திப் பிடித்தான் செழியன்.

பின்னால் திரும்பிப் பார்த்து, தண்ணீரை திறந்து விடச் சொல்லி செழியன் செய்கையால் தெரிவிக்க, அவனும் தண்ணீரை திறந்து விட்டான்.

தனது வலுவான கைகளின் உதவியுடன் தண்ணீரை கலவரக்காரர்களின் மீது பாய்ச்சி அடித்தான் அரண் செழியன்.

அதிவேகத்துடன் பாய்ந்து வந்த நீர் அவர்களை நிலைகுலையச் செய்ய, அனைவரும் தாங்கள் போட்டுக் கொண்டிருந்த சண்டையை நிறுத்தி அந்த இடத்தை விட்டு கலைந்தனர்.

அந்த நேரத்தில் சரியாக செழியன் அழைத்த போலீசாரும் அங்கு வந்துவிட, தண்ணீரை நிறுத்தும்படி கூறினான்.

தண்ணீர் நிறுத்தப்பட்ட போது அந்தக் கூட்டத்தில் நின்றிருந்த ஒருவன் அரண் செழியனை நோக்கி வந்தான்.

என்ன சார் அநியாயம் இது! எதுக்காக எங்க மேல தண்ணி பாய்ச்சுனீங்க?” என்று அவன் கேட்க, அவனை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தவன்,

ஏன்! நான் எதுக்காக பண்ணேன்னு உனக்குத் தெரியாதா? பொது இடத்துல, அதுவும் சாமானிய மக்களுக்கு முக்கியமான ரேஷன் கடை முன்னாடி நின்னு கும்பலா சண்டை போட்டுட்டு இருந்தாநான் பார்த்துட்டு சும்மா இருப்பேன்னு நினைச்சியா?” என்று அவன் அதிகாரமாகக் கேட்க, எதிரில் நின்றவன் சற்று மிரண்டு தான் போனான்.

இங்கே என்னய்யா பிரச்சனை? எதுக்காக பொதுமக்களுக்கு இடையூறு தர்ற மாதிரி சண்டை போட்டுட்டு இருக்கீங்க?” என்று குரல் உயர்த்தி செழியன் கேட்க,

சார்அது…” என்று ஒருவன் ஏதோ சொல்ல முன்வந்தான்.

அவன் பேச வந்தததைத் தடுத்த மற்றொருவனோ, “அதை எதுக்கு சார் நாங்க உங்ககிட்ட சொல்லணும். எங்களுக்குள்ள நடந்த பிரச்சனையைப் பத்தி நாங்களே பேசி தீர்த்துக்குறோம்என்றான் திமிராக.

அவனை துளைக்கும் பார்வையால் முறைத்தவன், “உங்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக்கறதுக்கு நீங்க ஒண்ணும் உங்க அப்பன் வீட்ல வச்சு சண்டை போடல. இது நாலு பேர் வந்து போற பொது இடம்!” என்றவன், அங்கே நின்றிருந்த போலீசாரைப் பார்த்து,

இவங்க எல்லாரையும் வண்டியில ஏத்தி ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போங்க!” என்று செழியன் கூற,

ஓகே சார்என்ற அந்த போலீசாரும் அங்கே கலவரம் செய்தவர்களை ஒவ்வெருவராக வண்டியில் ஏற்ற ஆரம்பித்தனர்.

இருவர் அங்கிருந்து தப்பித்து ஓட, அதைக் கண்ட செழியன் நொடிப் பொழுதில் யோசித்து, ஓடிச் சென்று ஒருவனின் சட்டைக் காலரை கொத்தாகப் பிடித்தான். அவனருகே ஓடி வந்த மற்றொருவனின் காலில் அவன் ஒரு உதை கொடுக்க, அவன் நிலைத் தடுமாறி கீழே விழுந்தான்.

பின்னர் கலவரக்காரர்கள் அனைவரும் ஒவ்வொருவராக போலீஸ் ஜீப்பில் ஏற்றப்பட்டனர்.

வண்டியில் ஏறி அமர்ந்த அந்தக் குழுவின் தலைவன் போன்றிருந்தவன், “எங்க பவர் தெரியாம எங்க மேல கையை வச்சுட்டீங்கல்ல சார். நிச்சயமா இதுக்கெல்லாம் அனுபவிப்பீங்க!” என்று கூறவும், அதைக் கேட்டு கோணலாகச் சிரித்தவன்,

உன் அப்பனுக்கு அப்பன்டா நானு. என்னோட இத்தனை வருஷ போலீஸ் வாழ்க்கையில உன்னை மாதிரி பல பேரைஏன்! உன்னைவிட மோசமானவனை எல்லாம் பார்த்திருக்கேன். தேவையில்லாம வாயை விட்டு உன்மேல கூடுதல் கேஸ் போட வச்சுராதஎன்றவன், வண்டியை காவல் நிலையத்திற்கு போகச் சொல்லி பணித்தான்.

பின்னர், தண்ணீர் லாரி ஓட்டுனரிடம் தண்ணீருக்கான பணத்தை கொடுத்துவிட்டு, அந்த வாகனத்திற்குப் பின்னாலேயே தனது பைக்கில் பின் தொடர்ந்து சென்றான்.

பிடித்து வரப்பட்டவர்கள் அனைவரும் காவல் நிலையத்திற்குள் அழைத்து வரப்பட, அரண் செழியன் தனது அறைக்குள் சென்று அமர்ந்தான்.

ஏட்டய்யா!” என்று அவன் அழைக்கவும் ஓடி வந்தார் சுயம்புலிங்கம்.

சொல்லுங்க சார்!” என்றபடி அவர் உள்ளே வர,

அவங்க எல்லாரோட டீட்டெயில்சும் முதல்ல வாங்கிடுங்க. அதுக்கப்புறமா நான் வந்து விசாரிக்குறேன்என்றான். அவரும் சரியென்று பதில் கூறிவிட்டு வெளியே சென்றார்.

யோசனையுடன் அமர்ந்திருந்த செழியன், தனது அலைபேசியில் இருந்து பார்கவிக்கு அழைத்தான்.

இரண்டாவது ரிங்கிலேயே அவள் ஃபோனை எடுக்க, “பாரூசாப்பிட்டியா?” என்று கேட்டான்.

ம்ம்ம்சாப்பிட்டேன் செழியன்என்றவளிடம்,

ஓகே…” என்றவன், “ஆமா! என்ன இரண்டாவது ரிங்கிலேயே ஃபோனை எடுத்துட்ட. நான் எப்போ கால் பணணுவேன்னு வெயிட் பண்ணிட்டே இருந்தியா?” என்று கேட்டான்.

அவளோ, அதுதான் உண்மை என்றாலும் அதை அவனிடம் ஒத்துக் கொள்ள வெட்கப்பட்டு, “..இல்லையே! நான் ஃபோன்ல சும்மா நியூஸ் பார்த்துட்டு இருந்தேன். அந்த நேரம் பார்த்து நீங்க கரெக்டா ஃபோன் பண்ணிட்டீங்க!” என்றாள்.

சரி சரி நம்பிட்டேன்என்றவனிடம்,

நீங்க நம்பலைன்னாலும் அதுதான் நிஜம்!” என்றாள் அவள்.

ஏதாவது சாப்பிட்டீங்களா?” என்று பார்கவி கேட்ட போது, அரண் செழியனின் அறைக்கு வந்த சுயம்புலிங்கம், காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களின் முழு தகவல்களையும் வாங்கி விட்டதாக அவனிடம் கூறினார்.

ஓகே பாரூநான் உன்கிட்ட அப்புறமா பேசுறேன்என்று கூறி அழைப்பைத் துண்டித்தவன், எழுந்து முன்னறைக்குச் சென்றான்.

அங்கிருந்த மேஜை ஒன்றில் சாய்வாக அமர்ந்தவன், அந்தக் கூட்டத்தில் இருந்த இருவரைப் பார்த்து தன்னருகே வரும்படி கூறினான்.

அவர்களும் சற்று பயத்துடனே எழுந்து செழியனின் அருகே வந்தனர்.

இரண்டு கோஷ்டிக்கும் நடுவுல என்ன தகறாரு?” என்று அவன் கேட்க, இருவரும் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றனர்.

பதில் சொல்ல மாட்டீங்களோ?” என்றவன், திரும்பி சுயம்புவைப் பார்க்க, அவர் எழுந்து சென்று லத்தியை எடுத்து வந்தார்.

அதை வாங்கிக் கொண்டவன், அந்த லத்தியை வாங்கி அதை தன் விரல்களால் தேய்த்தபடி, “வீணா இதுக்கு வேலை கொடுக்க வச்சுராதீங்க. நான் கேட்குறதுக்கு ஒழுங்கா பதில் சொன்னா சேதாரம் இல்லாம தப்பிக்கலாம்!” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்ட அனைவருக்கும் அடிவயிறு கலங்கியது.

சார்! அது வந்துபெருசா எந்தக் காரணமும் இல்ல சார். முதல்ல எங்க இரண்டு பேருக்கும் வாய் தகறாரு ஆச்சு. அது அப்படியே பேசிப் பேசி கோஷ்டி சண்டையா மாறிடிச்சுஎன்றான் ஒருவன்.

செழியனோ, புருவம் சுருக்கியபடி, “ஓஹோஅப்படின்னா உங்களுக்குள்ள வெறும் வாய் தகாறாரு தான் ஆச்சா?” என்றவன்,

அது சரி! அந்த வாய் தகறாரு ஏன் ரேஷன் கடை முன்னாடி ஆச்சு? அப்படின்னா நீ அங்கே ரேஷன் வாங்கப் போனியா?” என்று கேட்க, ஒருவன் ஆமாம் என்று பதிலளிக்க, மற்றவன் இல்லை என்றான்.

இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தவன், “ஆமாவா? இல்லையா? ஏதாவது ஒரு பதிலை சொல்லுங்கஎன்றதும் இருவரும் தலைக்கவிழ்ந்து கொண்டனர்.

அதைப் பார்த்ததும் மேஜையில் இருந்து கீழே இறங்கியவன், தனது வலது கையில் அணிந்திருந்த காப்பை முறுக்கினான். அதைப் பார்த்ததும் அவர்கள் இரண்டெட்டு பின்னால் நகர்ந்தனர்.

மயிலே மயிலேன்னாஇறகு போடாது. போட வைக்கணும்!” என்றவன், லத்தியை எடுத்துக் கொண்டு அவர்களை நோக்கி சென்றான்.

அங்கிருந்த சிறிய அறை ஒன்றில் அனைவரையும் போகச் சொன்னவன், உள்ளே சென்று அனைவரையும் லத்தியால் சாத்தினான்.

முழுதாக இரண்டு நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவன், தண்ணீரை எடுத்து பருகிவிட்டு வந்து நாற்காலியில் அமர்ந்தான்.

ஏட்டய்யா!” என்று அவன் அழைத்ததும் ஓடி வந்தார் சுயம்புலிங்கம்.

சார்!” என்றபடி தன் முன்பு வந்தவரிடம்,

முதல்ல நான் பேசுன இரண்டு பேரையும் இங்கே கூட்டிட்டு வாங்கஎன்று அவன் கூற, அவரும் செழியன் சொன்னவர்களை அவனிடம் அழைத்து வந்தார்.

ரேஷன் கடையில் உங்களுக்கு என்னடா வேலை? எதனால இந்தப் பிரச்சனை வந்தது. ஒழுங்கா உண்மையைச் சொல்லுங்க. இல்லைன்னா என்ன நடக்கும்னு தெரியும்லஎன்றபடி அவன் லத்தியைப் பார்க்க, அவர்களுக்கு வியர்த்து கொட்டியது.

இருவரில் ஒருவன், “சார்!” என்று அழைக்க, “ம்ம்ம்சொல்லுஎன்றான் செழியன்.

ரேஷன் கடையில அரிசி வாங்குறவங்ககிட்ட அதிக விலை கொடுத்து நாங்க அரிசி வாங்குவோம். மொத்தமா நூறு கிலோ கிடைச்சப்புறம் அதை பெரிய வியாபாரிங்ககிட்ட கை மாத்திவிட்டு லாபம் பார்ப்போம் சார்என்று அவன் கூற, அவனை முறைத்தான் செழியன்.

சரி அதுல என்ன தகறாரு?” என்று கேட்டவனிடம்,

வழக்கமா நாங்க தான் சார் அந்த ரேஷன் கடையில அரிசி வாங்கிட்டு இருந்தோம். ஆனா, இப்போ இவனும் இவனோட கூட்டாளிங்களும் புதுசா வந்து நான் அரிசி வாங்குற ஆளுங்களை அவன் பக்கமா இழுத்துக்குறான். இதனால எனக்கு ரொம்ப நஷ்டமாகுது சார். அதைப் பத்தி நான் கேட்க போனப்போ, அவன் ஆளுங்களை கூட்டிட்டு வந்து பிரச்சனை பண்ணான் சார். அதான் நானும் என் ஆளுங்களை கூட்டிட்டு வந்து சண்டை போட்டேன்என்றான்.

அதைக் கேட்டு எரிச்சலுற்றவனோ, “ஏன்டாநீ பண்ணுறதே அயோக்கித்தனம். இதுல உனக்கொருத்தன் போட்டியா வந்துட்டான்னு வேற நியாயம் பேசுறியா?” என்றபடி இருவரையும் மாற்றி மாற்றி பார்த்து,

அரசாங்கம் மலிவா கொடுக்குற பொருளை அதிக விலைக்கு வாங்கி விக்குறது சட்டப்படி தப்புன்னு உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?” என்று செழியன் கேட்க, இருவரும் தலைகவிழ்ந்து நின்றனர்.

உங்களை எல்லாம் சொல்லி திருத்த முடியாதுடா. ஒரு தடவை பட்டு அனுபவிச்சா தான் திருந்துவீங்கஎன்றவன்,

ஏட்டய்யாஇவங்க இரண்டு பேர் மேலையும் FIR போடுறதுக்கு டாக்குமென்ட்ஸ் ரெடி பண்ணுங்கஎன்று கூற, இருவரும் அரண்டு போயினர்.

சார்சார்வேண்டாம் சார். ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டோம் சார். இனிமே எந்தத் தப்பும் பண்ண மாட்டோம் சார்என்று, அவர்கள் தன்னிடம் கெஞ்சியதை சட்டை செய்யாமல் தனது அறைக்குள் சென்று விட்டான் செழியன்.

சுயம்புலிங்கம் FIR போடுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த வேளையில், அவரது அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்று பேசியவர், வேகமாக அரண் செழியனின் அறைக்கு விரைந்தார்.

உங்களுக்கு தான் சார் ஃபோன்!” என்றபடி அவர் அலைபேசியை செழியனிடம் கொடுக்க, புரியாமல் விழித்தபடி அதை வாங்கியவன் அலைபேசியை காதில் வைத்தான்.

ஹலோ!” என்றவனிடம்,

ஹலோஇன்ஸ்பெக்டர் தம்பி! நான் தான் MLA கனகரத்தினம் பேசுறேன்என்ற குரல் கேட்கவும்,

வணக்கம் சார்என்றான் செழியன்.

உங்களுக்கு சமீபமா தான் கல்யாணம் ஆச்சுன்னு கேள்விப்பட்டேன் தம்பி. வாழ்த்துகள்என்றவரிடம்,

நன்றி சார்!” என்று  அவன் பதில் கூற,

ஒரு நாள் உங்க மனைவியை அழைச்சுட்டு கண்டிப்பா நம்ம வீட்டுக்கு விருந்து சாப்பிட வரணும்என்றார் கனகரத்தினம்.

சரிங்க சார்என்று பதிலளித்தவனிடம்,

அது தம்பிஇன்னொரு முக்கியமான விஷயம் பேச தான் ஃபோன் பண்ணேன். முதல்ல என்னோட பி.ஏ ஜீவாகிட்ட தான் பேசச் சொன்னேன். ஆனா, என்ன இருந்தாலும் நீங்க எனக்கு வேண்டப்பட்டவரு இல்லையா. அந்த உரிமையில தான் நானே நேரடியா உங்ககிட்ட பேசுறேன்என்றதும்,

சொல்லுங்க சார்! என்ன விஷயம்?” என்று கேட்டான் செழியன்.

அது வந்து தம்பி! நம்ம அளுங்க மூணு பேரை ஸ்டேஷன்ல பிடிச்சு வச்சிருக்கீங்களாமே!” என்றதும்,

யாரு சார்?” என்று புரியாமல் கேட்டான் அவன்.

அதுதான் தம்பி! அந்த ரேஷன் கடை தகறாருல சில பேரை பிடிச்சுட்டு போனீங்களே அவனுங்க தான்அது நம்ம பயலுக தான். ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டாங்க. நீங்க இந்த ஒரு முறை மட்டும் அவங்களை மன்னிச்சு விட்டுருங்க. சரியா தம்பிஅப்போ நான் வச்சுடறேன்என்றார்.

இல்ல சார் அது…” என்று அவன் சொல்ல வந்ததைக் கூட காதில் வாங்காமல் அழைப்பை துண்டித்து விட்டார் கனகரத்தினம்.

எரிச்சலுடன் ஃபோனை சுயம்புவிடம் கொடுத்தவன், “என்ன ஏட்டய்யா இதெல்லாம்? MLA எதுக்காக இந்த விஷயத்துல மூக்கை நுழைக்குறார்?” என்று கேட்க,

இவங்க எல்லாரும் MLAக்கு வேண்டப்பட்ட ஆளுங்க சார். இந்த மாதிரி சட்ட விரோதமா அரசாங்கம் கொடுக்கற அரிசியை வாங்கி விக்குறதெல்லாம், அவர் இருக்கற தைரியத்துல தான் பண்ணுறானுங்க. இது பல காலமா இங்கே நடந்துட்டு இருக்கு சார்என்றார்.

அதைக் கேட்டவனுக்கு அதிகமான கோபம் வந்தது.

அவர் சொன்னா உடனே நான் எல்லாரையும் விடணுமா? நீங்க FIRக்கு ரெடி பண்ணுங்க. மத்தததை நான் பார்த்துக்குறேன்என்றதும், சுயம்புலிங்கம் தயங்கி நின்றார்.

என்ன யோசிச்சுட்டே நிக்குறீங்க? முதல்ல நான் சொன்னதை செய்யுங்கஎன்று அவன் சொன்ன பிறகு, “இதோ போறேன் சார்!” என்றார் அவர்.

அரண் செழியன் சொன்னவாறே தவறு செய்தவர்கள் மீது FIR போடப்பட்டது. இதை கேள்விப்பட்ட கனகரத்தினம், கோபத்தில் கொதித்துப் போனார்.

அரணாய் வருவான்

மீண்டும் சந்திப்போம்!

பிரியமுடன்,

சௌஜன்யா

Comments

Post a Comment

Popular posts

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 9

அரணாய் நீ வா (பாகம் 2) - Epi 7