Posts

Showing posts from July, 2024

Ongoing Novels

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 11

Image
  அரணாய் நீ வா ! பாகம் 2 அத்தியாயம் – 11 “ கார்த்திகேயனா ? உனக்கு நல்லா தெரியுமா சுபத்ரா !” என்று அதிர்ச்சி மாறாமல் கேட்ட அரண் செழியனிடம் , “ ஆமா சார் ! எனக்கு நூறு சதவீதம் உறுதியா தெரியும் . என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனது அவர் தான் ” என்றாள் சுபத்ரா . அதைக் கேட்டு பெருமூச்சு விட்டவன் , “ சரி ! சொல்லு சுபத்ரா . உனக்கு ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு என்ன நடந்தது ?” என்று செழியன் கேட்க , அவள் அந்தச் சம்பவத்தைப் பற்றி அவனிடம் விவரிக்க ஆரம்பித்தாள் . அன்று சுபத்ராவிற்கு மதியம் வரை மட்டுமே கல்லூரி இருக்க , தனது இருச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் . ரிஷியின் வீடு இருக்கும் இடத்தைக் கடந்து தான் அவள் தனது வீட்டிற்குச் செல்ல வேண்டும் . அந்த வீட்டை அவள் கடந்து சென்ற நேரத்தில் கேட்டை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தாள் ஒரு பெண் . முகம் முழுக்க வியர்த்துப் போயிருக்க , படபடப்பாகக் காணப்பட்டாள் அவள் . சுபத்ரா வருவதைக் கண்டதும் அவசரமாக கரம் நீட்டித் தடுத்து , வண்டியை நிறுத்தும்படி கூறினாள் . அந்தப் பெண்ணின் முகம் சுபத்ராவிற்கு பரிச்சயமாக இருக்கவும் , யோசனையுடன் சடன...

அரணாய் நீ வா - Epi 10

Image
  அரணாய் நீ வா!   அத்தியாயம் – 10 பார்கவி மற்றும் அவளது நண்பர்கள் தங்கியிருக்கும் தோட்டத்து வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் நால்வரும். இனியன் – ஷாரதா ஜோடிக்குப் பின்னாலேயே செழியன் மற்றும் பார்கவியும் வந்து விட நான்கு பேரும் சேர்ந்து அங்கு சென்றனர். தென்னை, வாழை, பலாமரம் என்று ரம்மியமான எழில் கொஞ்சும் ஒரு அழகிய தோப்பிற்கு நடுவே தான் அந்த வீடு அமைந்திருந்தது. நான்கு குடும்பங்கள் தங்கும் அளவிலான விசாலமான வீடு அது! அந்த வீட்டின் உரிமையாளர் வேறு ஊருக்கு குடிபெயர்ந்து விட்டதால், இந்தத் தோட்டத்து வீட்டை வேலைக்கு ஆட்கள் வைத்து பராமரித்து, அதை சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடுவது வழக்கம். தெரிந்தவர் ஒருவர் வழியாக, மல்லிகாவின் கணவன் தான் இந்த வீட்டை இரண்டு நாட்களுக்கு புக் செய்திருந்தான். நான்கு பேரும் அங்கே வரவும், வீட்டிற்கு பக்கவாட்டில் இருந்த ஒரு காலி இடத்தில் விறகுகளைக் குவித்து தீ போட்டு, கேம்ப் ஃபையர் வைத்திருந்தனர். அதை சுற்றி அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, இவர்கள் வருவதைக் கண்டதும், “ஹாய்… வாங்க வாங்க!” என்றபடி ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றனர். மல்லிகாவின் கணவன் அர்ஜூன் எழு...

அரணாய் நீ வா - Epi 9

Image
  அரணாய் நீ வா! அத்தியாயம் – 9 தன்னையே பார்த்துக் கொண்டு நிற்பவளின் முகத்தை செழியனும் பார்க்க, இருவரின் பார்வையும் ஒரே கோட்டில் தடைப்பட்டு நின்றது. இன்னும் செழியனின் கரம் பார்கவியின் நெற்றியிலேயே பதிந்திருக்க, இருவரின் யோசனையையும் கலைக்கும் விதமாக வந்தது, “அண்ணா!” என்கிற இனியனின் குரல். அதைக் கேட்டதும் பார்கவி சட்டென பதறி விலக, செழியனோ, “இனியன் தானே கூப்பிட்டான். எதுக்காக இப்படி பதறுற?” என்று அவளிடம் கேட்டான். அவள் ஏதோ சொல்ல வாயெடுக்கையில் இனியன் அங்கே வந்துவிட, அவனுக்குப் பின்னால் ஷாரதாவும் சேர்ந்து வந்தாள். இருவரையும் பார்த்தபடி வராந்தாவில் போடப்பட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்த அரண் செழியன், தனது ஷூவை கழற்றியபடி, “எல்லாரும் ஒண்ணா தான் இருக்கீங்க போல!” என்று கேட்டான். இனியனோ, “அது… அண்ணா நான் தான் இவங்க இரண்டு பேரையும் இங்கே வரச் சொன்னேன்” என்று கூறவும், “சும்மா சொல்லக் கூடாது இனியன். நீ ப்ளான் எல்லாம் நல்லா தான் போடுற!” என்றான் அவன், இருக்கையில் இருந்து எழுந்தபடி. “சரி சரி… உள்ளே வாங்க!” என்றபடி செழியன் வீட்டிற்குள் சென்றுவிட, அவனது முதுகையே வெறித்துப் பார்த்த பார்கவி, ...

அரணாய் நீ வா - Epi 8

Image
  அரணாய் நீ வா!   அத்தியாயம் – 8 செழியன் அவளை அங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியும், ஆச்சர்யமும் கலந்து பார்கவியையே அவன் பார்த்துக் கொண்டிருக்க, அவளோ அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை தாழ்த்திக் கொண்டாள். அதன் பிறகு, அவன் வாகன ஓட்டுனரிடம் சென்று தனது வழக்கமான விசாரணையை நடத்தி முடித்தான். பின்னர், திரும்பி மீண்டும் பார்கவியைப் பார்த்தவன், அப்பொழுது தான் அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த ஷாரதாவைப் பார்த்தான். அவளருகே சென்று, “ஓஹ்… இரண்டு பேரும் ஒண்ணா தான் வந்திருக்கீங்களா?” என்றவனிடம், “ஆமா மாமா! நாங்க டூர் வந்த விஷயத்தைப் பத்தி அக்கா உங்ககிட்ட எதுவும் சொல்லலையா?” என்று ஷாரதா கேட்கவும், “ஏய்! என்னடி நீ? அவரைப் போய் மாமா சோமான்னு சொல்லிட்டு இருக்க!” என்று தன் தங்கையின் காதோரம் கிசுகிசுத்தாள் பார்கவி. ஆனால், அவள் பேசியதை உதாசீனம் செய்த ஷாரதாவோ, அரண் செழியனையே கேள்வியாக நோக்கவும், “என்கிட்ட இதைப் பற்றி எதுவும் உங்க அக்கா சொல்லலையே!” என்றான் பார்கவியையே கூர்ந்து பார்த்தபடி. “ஓஹோ…” என்ற ஷாரதா, “இரண்டு நாள் டூர் தான் மாமா. அக்காவோட ப்ரெண்ட்ஸ் அன்ட் ஃபேமிலி டூர் ப்ளான் பண்...

அரணாய் நீ வா - Epi 7

Image
  அரணாய் நீ வா!   அத்தியாயம் – 7 மறுநாள் காலையில் சீக்கிரமே கிளம்பி காவல் நிலையத்திற்குச் சென்றான் அரண் செழியன். அன்று அவன் இன்ஸ்பெக்டராக அந்தக் காவல் நிலையத்தில் முதல் நாள் பொறுப்பேற்கிறான் என்பதால், அங்கே பணிபுரியும் காவலர்கள் அனைவரும் செழியனை வரவேற்பதற்காக வாசலில் காத்து நின்றனர். சப் – இன்ஸ்பெக்டர் ஜெகன், செழியனுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்க, அனைவரும் கரகொலி எழுப்பினர். “தேங்க் யூ!” என்று அனைவரிடமும் தலையசைத்து அவர்களது வரவேற்பை ஏற்றுக் கொண்டவன் தனக்கான தனியறைக்குச் சென்று இருக்கையில் அமர்ந்தான். அவனுக்கு பின்னால் வந்த சப் – இன்ஸ்பெக்டர் ஜெகனை எதிரே இருந்த இருக்கையில் அமரச் சொன்னவன், “உங்க கூட சேர்ந்து வொர்க் பண்ண போறதுல சந்தோஷம் ஜெகன் சார்!” என்றான். தனக்கு கீழே உள்ள பதவியில் அவர் இருந்தாலும், தன்னை விட வயதில் மூத்தவர் என்பதால் அவரை மரியாதையுடனே நடத்தினான் செழியன். “நன்றி சார்!” என்ற ஜெகனிடம், “நம்ம கன்ட்ரோல்ல வர்ற ஏரியா ரவுடிங்க, அதிகமான கிரிமினல் ரெக்கார்ட்ஸ் இருக்கறவங்களோட மொத்த டீட்டெயிலும் எனக்கு வேணும்” என்றான் செழியன். “டூ டேஸ்ல ரெடி பண்ணி தர்றேன் சார்” என்று ஜெகன...

அரணாய் நீ வா! - Epi 6

Image
  அரணாய் நீ வா!   அத்தியாயம் – 6 அன்று ஞாயிற்றுக்கிழமை… காவல் ஆய்வாளாராக பொறுப்பேற்பதற்காக, அன்று திருநெல்வேலிக்கு கிளம்பி வந்திருந்தான் அரண் செழியன். திருநெல்வேலி மாவட்டம் களக்காடு சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் தான் அவன் பணியாற்ற இருக்கிறான். பேருந்தில் வந்து இறங்கியவன், அந்த ஊரைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக தோளில் தனது துணிகள் இருந்த பையை மாட்டியடி, அந்த ஊரின் முக்கியமான ஒரு தெருவில் நடந்து சென்றான். சுற்றிலும் மலைகளும், தென்னந்தோப்பு, வயல்வெளி, அதற்கு நடுவே குளங்கள் என்று இயற்கை எழிலுடன் அழகாக இருந்தது அவ்வூர். கிராமம் என்றோ அல்லது நகரம் என்றோ சொல்ல முடியாத, இரண்டிற்கும் இடையே ஒரு சின்ன டவுன் என்று சொல்லும் அளவிலான ஊர் தான் களக்காடு. பெரும்பாலும் விவசாயம், சொந்த தொழில் செய்பவர்கள் தான் அங்கே அதிகம். அந்த நண்பகல் வேளையில் வெயில் சற்று அதிகமாக இருந்தாலும், சுற்றிலும் மலைகளும் மரங்களும் இருந்ததால், வீசிய லேசான குளிர்ந்த காற்று செழியனை வந்து மோதி, அவனுக்கு இதத்தை அளித்தது. ஏனோ, அவனுக்கு பார்த்ததுமே அந்த ஊர் மிகவும் பிடித்து விட்டது! மதிய வேளை நெருங்கி இருந்தாலும் அந்த ஊ...