Ongoing Novels

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 11

Image
  அரணாய் நீ வா ! பாகம் 2 அத்தியாயம் – 11 “ கார்த்திகேயனா ? உனக்கு நல்லா தெரியுமா சுபத்ரா !” என்று அதிர்ச்சி மாறாமல் கேட்ட அரண் செழியனிடம் , “ ஆமா சார் ! எனக்கு நூறு சதவீதம் உறுதியா தெரியும் . என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனது அவர் தான் ” என்றாள் சுபத்ரா . அதைக் கேட்டு பெருமூச்சு விட்டவன் , “ சரி ! சொல்லு சுபத்ரா . உனக்கு ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு என்ன நடந்தது ?” என்று செழியன் கேட்க , அவள் அந்தச் சம்பவத்தைப் பற்றி அவனிடம் விவரிக்க ஆரம்பித்தாள் . அன்று சுபத்ராவிற்கு மதியம் வரை மட்டுமே கல்லூரி இருக்க , தனது இருச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் . ரிஷியின் வீடு இருக்கும் இடத்தைக் கடந்து தான் அவள் தனது வீட்டிற்குச் செல்ல வேண்டும் . அந்த வீட்டை அவள் கடந்து சென்ற நேரத்தில் கேட்டை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தாள் ஒரு பெண் . முகம் முழுக்க வியர்த்துப் போயிருக்க , படபடப்பாகக் காணப்பட்டாள் அவள் . சுபத்ரா வருவதைக் கண்டதும் அவசரமாக கரம் நீட்டித் தடுத்து , வண்டியை நிறுத்தும்படி கூறினாள் . அந்தப் பெண்ணின் முகம் சுபத்ராவிற்கு பரிச்சயமாக இருக்கவும் , யோசனையுடன் சடன...

அரணாய் நீ வா! (பாகம் 2) - Epi 10

 அரணாய் நீ வா!

பாகம் 2


 

அத்தியாயம் – 10

மூணாறில் இருந்து திரும்பி வந்ததும் முதல் வேலையாக, சுபத்ராவை பார்க்கச் சென்றாள் பார்கவி.

அவளுக்காக சில பரிசுப் பொருட்களை வாங்கி வந்தவள், அவளது வீடு தேடிச் சென்றாள்.

அழைப்பு மணியை அவள் அழுத்தவும், கதவை திறந்தார் சுபத்ராவின் தாய் தாமரை.

பார்கவியைக் கண்டவர், “வாம்மா…” என்று அழைத்தாலும், அவரது முகம் வாட்டமாக இருக்க, குழப்பமடைந்தாள் பார்கவி.

உள்ளே சென்றவள், “என்னாச்சு ஆன்டி. ஏன் டல்லா இருக்கீங்க?” என்று கேட்க, விக்கி அழ ஆரம்பித்து விட்டார் அவர்.

பதறிப் போனவள், “ஐயோ! என்னாச்சு ஆன்டி? ஏன் அழறீங்க?” என்று கேட்டவளிடம்,

நம்ம சுபத்ரா…” என்றவருக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை.

அவர் ஏங்கி ஏங்கி அழவும், “சுபத்ராவுக்கு என்னாச்சு?” என்று கேட்டாள்.

அவளுக்கு ஆக்சிடென்ட் ஆயிருச்சும்மா!” என்ற தாமரையிடம், “ஆக்சிடென்டா? எப்போ? எப்படி?” என்றபடி பதட்டமானாள் பார்கவி.

இரண்டு நாள் முன்னாடி காலேஜூக்கு அவளோட டூ வீலர்ல கிளம்பிப் போனாமதியம் எங்களுக்கு ஹாஸ்பிடல்ல இருந்து ஃபோன் வந்தது. ஆக்சிடென்டுன்னு சொன்னாங்க. கை, கால்ல எலும்பு முறிவு. இன்னும் நிறைய இடங்கள்ல காயம்னு சொன்னாங்க. இன்னும் அவளை ஐசியூல தான் வச்சிருக்காங்கம்மா. அவளுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு பார்கவிஎன்று, தாமரை தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுது கரைந்தார்.

அதைக் கண்டவள், சமையலறைக்குச் சென்று நீர் எடுத்து வந்து, அவரை தண்ணீர் அருந்த வைத்து ஆசுவாசப்படுத்தினாள்.

கவலைப்படாதீங்கம்மா! நம்ம சுபத்ராவுக்கு எதுவும் ஆகாதுஎன்று அவள் கூற, தாமரையின் அழுகை சற்று குறைந்தது.

இப்போ ஹாஸ்பிடல்ல சுபாவுக்குத் துணையா யாரு இருக்காங்க?” என்று கேட்டவளிடம்,

விஷயம் கேள்விப்பட்டதுமே என் மகன் துபாய்ல இருந்து கிளம்பி வந்துட்டான். அவன் தான் இப்போ ஆஸ்பத்திரில இருக்கான்மா. சுபத்ராவோட அப்பா போன பிறகு, என் மகன் தான் அவர் இடத்துல இருந்து எங்களை எல்லாம் பார்த்துக்குறான்என்றார் தாமரை.

சற்று நேரம் அவருடன் அமர்ந்து பேசி, அவரை ஆறுதல்படுத்தியவள் தனது வீட்டிற்குச் சென்றாள்.

வருத்தத்துடன் வீட்டிற்கு வந்தவளைக் கண்ட அரண் செழியன், என்னவென்று தன் மனைவியிடம் விசாரிக்க சுபத்ராவிற்கு நிகழ்ந்த விபத்தினைக் குறித்து அவனிடம் கூறினாள் பார்கவி.

சோஃபாவில் போய் அமர்ந்தவளுக்கு சுபத்ராவின் முகம் நினைவிற்கு வரவும், தன்னை அறியாமல் கண்ணீர் சிந்தினாள்.

அதைக் கண்டவனோ, விரைந்து சென்று தன் மனைவியின் தோள் தொட்டு அவளை ஆறுதல்படுத்தினாள்.

சுபா ரொம்ப நல்ல பொண்ணு செழியன். அவளுக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்கணும்?” என்றவளிடம்,

சரிநீ ஃபீல் பண்ணாத பாரூ. சுபத்ரா நல்லபடியா திரும்பி வந்துடுவாஎன்றான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவளோ, “எனக்கு இப்பவே சுபாவை பார்க்கணும். ப்ளீஸ் என்னை இப்பவே ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போறீங்களா?” என்று கேட்க, சில நொடிகள் யோசித்தவன்,

சரி! நீ ரெடியாகு பாரூஇப்பவே போய் பார்த்துட்டு வந்துடலாம்என்றான்.

பார்கவி தயாராகச் சென்ற வேளையில், சுயம்புலிங்கத்திற்கு அழைத்தவன், சுபத்ராவின் விபத்து சம்பந்தமாக ஏதாவது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்று கேட்டான்.

பத்து நிமிடங்கள் கழித்து செழியனுக்கு அழைத்த சுயம்புலிங்கம், அப்படி எந்த வழக்கும் தங்கள் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை என்கிற தகவலை அவனிடம் கூறினார்.

ஏன் சுபத்ராவின் வழக்கு தங்கள் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்று குழம்பியவன், பார்கவியுடன் சேர்ந்து அவள் அனுமதிக்கப்படிருந்த மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றான்.

ரிசெப்ஷனில் விசாரித்து அவசர சிகிச்சை பிரிவுக்குச் சென்றனர் இருவரும்!

வெளியே நின்ற ஒரு செவிலியரிடம், “சுபத்ராவை இப்போ நாங்க பார்க்க முடியுமா?” என்று அரண் செழியன் கேட்க, கடிகாரத்தில் மணியைப் பார்த்தவர்,

இன்னும் அரை மணிநேரம் கழிச்சு தான் விசிட்டர்சை உள்ளே விடுவோம். நீங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்கஎன்றார் அவர்.

அப்பொழுது அவர்களிடம் வந்த ஒரு இளைஞன், “நீங்க தான் பார்கவியா?” என்று கேட்க, அவளோ யாரென்று புரியாமல் விழித்தபடி ஆமென்று தலையசைத்தாள்.

நான் தான் சுபத்ராவோட அண்ணன் சரவணன். என் தங்கச்சி உங்களைப் பத்தி நிறைய சொல்லியிருக்காஎன்றான்.

அவளுக்கு அதைக் கேட்டதும் மிகவும் வருத்தமாகி விட்டது.

ஹலோ! ஐ ஆம் செழியன். பார்கவியோட ஹஸ்பன்ட். நான் களக்காடு ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டரா இருக்கேன்என்று சரவணனுடன் கைக்குலுக்கி தன்னை அறிமுகம் செய்து கொண்டான் அரண் செழியன்.

உங்களை பத்தியும் நிறைய கேள்விப்பட்டிருக்கேன் சார். நைஸ் மீட்டிங் யூ!” என்ற சரவணனிடம், “வாங்க! அப்படி உட்கார்ந்து பேசுவோம்என்றான் அவன்.

பின்னர் மூவரும் சென்று அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர்.

சுபத்ராவுக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு? ஏன் நீங்க இந்த விபத்து பத்தி போலீசுக்கு எந்தத் தகவலும் கொடுக்கலஎன்று செழியன் கேட்க,

இல்ல சார்! ஏற்கனவே ஹாஸ்பிட்டல்ல இருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் குடுத்து போலீஸ் வந்து விசாரிச்சாங்களே!” என்று சரவணன் கூற, குழம்பிப் போனான் அவன்.

என்ன சொல்றீங்க? நான் விசாரிச்ச வரைக்கும் சுபத்ராவை பத்தி எந்தக் கேசும் பதிவாகலைன்னு தான் எனக்கு நியூஸ் வந்ததுஎன்றவனிடம்,

இல்ல சார். நேத்து ஒரு சப்-இன்ஸ்பெக்டர் வந்து சுபத்ராவை பத்தி விசாரிச்சுட்டு போனார்என்றான் சரவணன்.

யோசனையுடன், “யாரு? சப்இன்ஸ்பெக்டர் ஜெகனா?” என்று செழியன் கேட்க, “ஆமா சார். அவர் தான்!” என்றான்.

அவர் எதுக்காக விசாரணை நடத்திட்டு கேஸ் ஃபைல் பண்ணாம விட்டாரு?’ என்று யோசித்தவன்,

சரி நீங்க கவலைப்படாதீங்க. சுபத்ராவோட ஆக்சிடென்ட் விஷயத்தை நான் பார்த்துக்குறேன்என்றான்.

அரை மணிநேரம் கழித்து பார்கவியும், அரண் செழியனும் சுபத்ராவை பார்ப்பதற்காக அனுமதிக்கப்பட்டனர்.

அங்காங்கே கட்டுகளுடன் சுயநினைவின்றி படுத்திருந்திருந்தாள் சுபத்ரா. அவளைப் பார்த்த பார்கவிக்கு நெஞ்சம் கலங்கி விட்டது.

சில நிமிடங்கள் நின்று அவளைப் பார்த்தவர்கள், செவிலியர் போகச் சொன்னதும் அந்த அறையில் இருந்து வெளியே வந்தனர்.

விழிநீரை துடைத்துக் கொண்ட பார்கவியோ, “சுபத்ரா நல்லா வண்டி ஓட்டத் தெரிஞ்ச பொண்ணு தான் செழியன். ஆனா, எப்படி கேர்லெஸ்சா விட்டான்னு தான் தெரியலஎன்று கூற,

சரி! நீ அதை நினைச்சு வருத்தப்படாத பாரூசுபத்ராவோட ஆக்சிடென்ட் விஷயத்தை நான் பார்த்துக்குறேன்!” என்றான்.

அதன் பிறகு இருவரும் கிளம்பி வீட்டிற்குச் சென்றனர். அன்று சற்று தாமதமாக, மதியத்திற்குப் பிறகே காவல் நிலையத்திற்குக் கிளம்பிச் சென்றான் அரண் செழியன்.

முதல் வேலையாக சுயம்புலிங்கத்தை தனது அறைக்கு அழைத்தவன், “இரண்டு நாள் முன்னாடி ஏதாவது ஆக்சிடென்ட் விஷயமா நம்ம ஸ்டேஷனுக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்து ஃபோன் வந்ததா?” என்று கேட்க,

நான் இருந்த வரைக்கும் எந்த ஃபோன் காலும் வரல சார். மதியத்துக்கு மேல, இரண்டு மணிநேரம் பெர்மிஷன் போட்டுட்டு போனேன். ஒருவேளை அந்த சமயம் வந்திருக்க வாய்ப்பிருக்குஎன்றார் அவர்.

ம்ம்ம்... அப்படின்னா அன்னைக்கு நீங்க வெளியே போன நேரத்துல ஸ்டேஷன் கால்ஸ் அட்டென்ட் பண்ணது யாரு?” என்று செழியன் கேட்க, “நம்ம இளங்கோ தான் சார்என்றார் ஏட்டு.

சரி நீங்க போயிட்டு இளங்கோவை வரச் சொல்லுங்கஎன்று அவன் கூற, அடுத்த நிமிடமே கான்ஸ்டபில் இளங்கோ அரண் செழியனின் அறைக்கு வந்தார்.

அவரிடம் விசாரித்ததில், மருத்துவமனையில் இருந்து சுபத்ராவின் விபத்து தொடர்பான தகவல் வந்தது உறுதி செய்யப்பட்டது.

அந்த நேரத்தில் காவல் நிலையத்தில் இருந்த சப்இன்ஸ்பெக்டர் ஜெகன், தான் அந்த விஷயத்தை பார்த்துக் கொள்வதாகக் கூறியதாகச் செழியனிடம் தெரிவித்தார் இளங்கோ.

அவரிடம் விசாரித்து முடித்ததும் ஜெகனை தனது அறைக்கு அழைத்தவன், “நேத்து சுபத்ராங்கற பொண்ணுக்கு நடந்த ஆக்சிடென்ட் சம்பந்தமா விசாரிக்க ஹாஸ்பிட்டல் போனீங்களா?” என்று கேட்க, சில நொடிகள் யோசித்தவர்,

இல்லையே சார்! நேத்து நான் ஸ்டேஷன் டியூட்டி தான் பார்த்துட்டு இருந்தேன். எந்த விசாரணைக்கும் போகலஎன்று கூற, பல்லைக் கடித்தான் செழியன்.

நல்லா யோசிச்சு சொல்லுங்க ஜெகன் சார். நான் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாம ஒரு விஷயத்தைப் பத்தி கேட்க மாட்டேன்னு உங்களுக்கே நல்லா தெரியும்!” என்று சற்று காட்டமாகவே செழியன் பேச, ஜெகனுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

சார்அது வந்து…” என்று இழுத்தவரிடம்,

என்ன வந்து போயின்னு இழுக்குறீங்க? நேத்து நீங்க ஹாஸ்பிட்டலுக்கு விசாரிக்க போன விஷயத்தை கான்ஸ்டபில் இளங்கோவும், சுபத்ராவோட அண்ணன் சரவணனும் உறுதி செஞ்சிருக்காங்கஎன்றான்.

அதைக் கேட்டதும் உஷாரான ஜெகன், “சாரி சார்! டென்ஷன்ல ஏதோ மறந்துட்டேன். நான் நேத்து போய் விசாரிச்சது உண்மை தான் சார்என்றவரை முறைத்தவன்,

உங்க மனசாட்சிக்கு பயமில்லைன்னாலும், அட்லீஸ்ட் வாங்குற சம்பளத்துக்காகவாவது கடமையைச் சரியா செய்யணும்னு நினைக்கலாம்லஎன்றான்.

தலைகவிழ்ந்தபடி, “சாரி சார்!” என்றவரிடம், “சரிஅந்த ஆக்சிடென்ட் சம்பந்தமா என்ன தெரிஞ்சது? விபத்து எங்கே நடந்தது? சுபத்ராவோட வண்டியோட மோதின வண்டி எது?” என்று செழியன் அடுக்கடுக்கான கேள்விகளை எடுத்து வைக்க,

சார்நான் விசாரிச்ச வரைக்கும் இந்த ஆக்சிடென்டை பத்தி எந்தத் தகவலும் தெரியல. அந்தப் பொண்ணு கண் முழிச்சு ஏதாவது சொன்னா தான் சார் தெரியும்என்றார் ஜெகன்.

சட்டென கோபத்துடன் எழுந்து நின்றவன், “உங்களை எல்லாம் யாருங்க டிபார்ட்மென்ட்ல எடுத்தது? சுபத்ராவை யாரு ஹாஸ்பிட்டல்ல சேர்த்தாங்க, அப்படிங்கற கோணத்துல இருந்து விசாரணையைத் தொடங்கி இருந்தாலே இந்த கேசை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு போயிருக்கலாம்என்றவன், கோபத்தைக் குறைப்பதற்காக தண்ணீரை எடுத்து அருந்தினான்.

நீரை அருந்தி முடித்து வந்தவன், “இன்னும் ஏன் இங்கேயே நிக்குறீங்க? போய் வேலையைப் பாருங்கஎன்று கத்த, ஜெகன் அங்கிருந்து சென்று விட்டார்.

பின்னர் சுபத்ராவின் வழக்கை தானே ஏற்று நடத்த முடிவு செய்தவன், முதலில் அவள் சேர்க்கப்பட்ட மருத்துவமனையில் இருந்து விசாரணையைத் தொடங்கினான்.

மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டு, சுபத்ராவை அங்கு கொண்டு வந்து அனுமதித்த நபரின் அலைபேசி எண்ணை வாங்கியவன், அவரிடம் பேசி அவரை நேரில் சந்திக்கச் சென்றான்.

சுபத்ரா விபத்தில் அடிப்பட்டு கிடந்த இடத்திற்கு அரண் செழியனை அழைத்துச் சென்றான் ரவி என்ற இளைஞன்.

நானும் என் மனைவியும் என்னோட மாமா வீட்டுக்கு இந்த வழியா கார்ல போயிட்டு இருந்தப்போ, அந்தப் பொண்ணு இங்கே அடிப்பட்டு கிடந்ததைப் பார்த்தோம் சார். உடனே எங்க கார்ல ஏத்தி அவங்களை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிட்டோம்என்றான் ரவி.

அதை முழுதாகக் கேட்டவன், “சுபத்ராவுக்கு ஆக்சிடென்ட் ஆனப்போ அவங்களோட டூ வீலர் எங்கே இருந்தது?” என்று செழியன் கேட்க,

தெரியாது சார்! நாங்க பார்த்தப்போ அவங்க மட்டும் தான் இருந்தாங்க. வண்டி இல்லஎன்றான் அவன்.

அதைக் கேட்ட செழியனுக்கு அதிர்ச்சியாக இருக்க, “சரி நீங்க போகலாம். தேவைப்பட்டா விசாரணைக்கு கூப்பிடுவேன்என்றான்.

ரவி அங்கிருந்து சென்ற பிறகு, சுற்றி அந்த இடத்தை நோட்டம் விட்டான் செழியன்.

ஊருக்கு சற்று வெளியே, சாலையின் இருபுறமும் வயல்கள் இருக்க, சுற்றி முற்றி பார்த்தான். அந்த சாலையில் ஒரு பெரிய வீடு மட்டுமே இருந்தது.

அருகில் சென்று அந்த வீட்டை நோட்டம் விட்டவனுக்கு அந்த வீட்டில் சிசிடிவி கேமரா இருப்பது தெரிந்தது.

அந்த சிசிடிவியில் சுபத்ராவின் விபத்து குறித்த வீடியோ ஏதாவது பதிவாகியிருந்தால் தனக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தவன், நேராக காவல் நிலையத்திற்குச் சென்றான்.

சுயம்புலிங்கத்திடம் தான் அறிந்த விஷயங்களைப் பற்றி கூறியவன், மறுநாளே அவருடன் சேர்ந்து அந்த வீட்டிற்குக் கிளம்பிச் சென்றான்.

வீட்டின் கேட்டிற்கு வெளியே நின்றபடி, “வீட்டில் யாரும்மா?” என்று சுயம்புலிங்கம் கத்த, ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வெளியே வந்தார்.

இருவரும் போலீஸ் உடை அல்லாது, மஃப்டியிலே தான் அங்கு விசாரணைக்கு வந்திருந்தனர்.

யாருங்க? என்ன வேணும்?” என்று அந்தப் பெண்மணி கேட்க, “நாங்க களக்காடு போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து வர்றோம். நாலு நாள் முன்னாடி இந்த ஏரியாவுல நடந்த ஒரு ஆக்சிடென்ட் விஷயமா விசாரிக்க வந்திருக்கோம்என்றார் சுயம்புலிங்கம்.

போலீஸ் என்றதும் தனது கணவரை வெளியே அழைத்தார் அந்தப் பெண்.

அவரும் வெளியே வந்து என்ன ஏதென்று விவரம் கேட்டு, செழியனையும் சுயம்புவையும் உள்ளே அழைத்துச் சென்றார்.

உள்ளே சென்று வாசலில் செருப்பை கழற்றிய அரண் செழியன், அந்த வீட்டின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருச்சக்கர வாகனத்தைப் பார்த்தான்.

அதைப் பார்த்ததுமே அவனது கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. அது சுபத்ராவின் இருச்சக்கர வாகனம் தான். செழியனுக்கு அந்த வாகனத்தைப் பார்த்ததுமே ஏதோ புரிவது போன்று இருக்க, சுயம்புலிங்கத்திடம் அந்த விஷயத்தைக் கூறினான்.

அவருக்கும் அதிர்ச்சியாக இருக்க, இருவரும் எதையும் காட்டிக் கொள்ளாமல் உள்ளே சென்றனர்.

என்ன விஷயம் சார்?” என்று அந்த வீட்டின் உரிமையாளர் முருகேசன் கேட்க, சுபத்ராவின் விபத்து குறித்தும், தங்களுக்கு அந்த வீட்டின் சிசிடிவியை ஆய்வு செய்ய வேண்டும் என்பது குறித்தும் விபரமாகக் கூறினான் செழியன்.

அதைக் கேட்டவரோ, “சிசிடிவி பத்தி என் மகனுக்குத் தான் சார் தெரியும். அவன் இப்போ வர்ற நேரம் தான். வந்ததும் எடுத்து தரச் சொல்றேன்என்றார்.

சரி!” என்று அவருக்கு பதிலளித்த செழியன்,

உங்க மகன் என்ன பண்ணுறார்?” என்று யதார்த்தமாகக் கேட்க,

எங்க குடும்பம் விவசாய குடும்பம் சார். எங்களுக்கு சொந்தமா வயல் வரப்பு, தோப்பு துறவு எல்லாம் இருக்கு. அதை பார்த்துக்கறதுல எங்களுக்கு உதவியா இருக்கான்என்றார் அவர்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, வெளியே ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

சில நிமிடங்கள் கழித்து ஒரு இளைஞன் அந்த வீட்டிற்குள் வந்தான். கூடத்தில் அமர்ந்து தன் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்த அரண் செழியனைக் கண்டதும் அதிர்ந்து போய் நின்றுவிட்டான் அவன்.

அவனது முகமாறுதல்களை செழியனும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

இவன் தான் சார் எங்க மகன். பெயர் ரிஷிஎன்று அவர் கூற, எழுந்து அவனிடம் சென்றான் செழியன்.

நாலு நாள் முன்னாடி இந்த ஏரியாவுல ஒரு ஆக்சிடென்ட் நடந்தது இல்லையா?” என்று அவன் கேட்டதுமே பதறிப் போனவன், “எனக்கெதுவும் தெரியாது சார். நான் எதுவும் பண்ணலஎன்று சட்டென மறுத்தான் ரிஷி.

அதைக் கேட்டதும் புருவங்கள் சுருக்கியவன், “நீ பண்ணதா நானும் சொல்லவே இல்லையே. அந்த ஆக்சிடென்ட் சம்பந்தமா சில தகவல்கள் எங்களுக்கு தேவைப்படுது. உங்க வீட்டில் சிசிடிவி இருக்கறதைப் பார்த்தேன். அதோட ஹார்ட் டிஸ்க் எங்களுக்கு வேணும்என்றான்.

ரிஷிக்கோ முகம் முழுவதும் வியர்த்துக் கொட்டியது.

இல்ல சார். போன வாரம் தான் கேமரா ரிப்பெயர் ஆச்சு. இன்னும் சரி பண்ணல சார்என்று ரிஷி கூற,

கேமரா ரிப்பெயர் ஆயிருச்சா? என்னடா சொல்ற? நல்லா தானே ஓடிட்டு இருந்ததுஎன்று ரிஷியின் தந்தை கூற, அவனை திரும்பிப் பார்த்தான் அரண் செழியன்.

அடுத்து அவன் என்ன செய்யப் போகிறான் என்று புரிந்து சுதாரிப்பதற்குள் அங்கிருந்து தப்பித்து ஓட ஆரம்பித்தான் ரிஷி.

கேட்டை திறந்து அவன் வெளியே ஓட, சிறுத்தை வேகத்தில் அவனுக்குப் பின்னால் ஓடி அவனை எட்டிப் பிடித்தான் அரண் செழியன்.

அவனை ரோட்டில் படுக்க வைத்து, அவனது இரண்டு கைகளையும் பின்னால் கட்டியவன், “ஏட்டய்யாஎன்று கத்த, கை விலங்கோடு ஓடி வந்தார் அவர்.

அவனது கைகளில் விலங்கை பூட்டி அழைத்து வந்தவன், வெளியே நின்றிருந்த ரிஷியின் காரைப் பார்த்தான்.

அவனது காரின் இடது பக்கம் எதிலோ இடித்து நொறுங்கிப் போயிருந்தது.

போதுமான ஆதாரங்கள் தனக்குக் கிடைத்ததும் ரிஷியின் தந்தையிடம் சென்றவன், “சுபத்ராவோட விபத்துல உங்க மகனுக்கு சம்பந்தம் இருக்கலாம்னு சந்தேகத்தின் பெயரில் அவனை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போறோம். எதுவா இருந்தாலும் நீங்க ஸ்டேஷன்ல வந்து பேசிக்கோங்கஎன்றான்.

அதைக் கேட்டு ரிஷியின் தாய் கதறி அழ, அவனது தந்தை அதிர்ந்து போய் நின்றிருந்தார்.

களக்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட ரிஷியிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன.

அவனை விசாரணை செய்ததில் இருந்து, அவன் எதையோ நினைத்து பயப்படுவது போன்று அரண் செழியனுக்குத் தோன்றியது.

உண்மையைச் சொன்னா நீ தப்பிக்கலாம் ரிஷி. சொல்லுசுபத்ராவோட வண்டி உன் வீட்ல எப்படி வந்தது?” என்று செழியன் கேட்க,

எனக்கு தெரியாது சார். எங்க வீட்டு பக்கமா அந்த வண்டி விழுந்து கிடந்தது. அதை நானே போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைக்கணும்னு தான் நினைச்சிருந்தேன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்கஎன்றான்.

சரிஅப்படின்னா உன்னோட கார் எப்படி டேமேஜ் ஆச்சு?” என்று அவன் கேட்க, “நேத்து நான் பிசினஸ் விஷயமா வள்ளியூர் போனப்போ, குறுக்க வேறொரு கார் வந்து என்னோட கார்ல மோதிருச்சு சார். அதனால ஏற்பட்ட டேமேஜ் தான் அதுஎன்றான்.

அவனை சந்தேகமாகப் பார்த்தவன், “இதை என்னை நம்ப சொல்றியா?” என்று கேட்க, “எங்க அம்மா மேல சத்தியமா சொல்றேன் சார்நான் சொல்றது நிஜம் தான். நீங்க வேணா விசாரிச்சு பாருங்க. லேணும்னா எனக்கு ஆக்சிடென்ட் நடந்த விஷயத்தைப் பத்தின டீட்டெய்ல்ஸ் எல்லாம் நானே தர்றேன்என்றான் ரிஷி.

ஒருவேளை அவன் சொல்வது உண்மையாக இருக்குமோ என்று நினைத்த செழியனுக்கு, சுபத்ராவின் இருச்சக்கர வாகனம் ரிஷியின் வீட்டில் நிற்பது மட்டும் இடித்தது.

ரிஷியிடம் அவன் விசாரணை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், வக்கீலுடன் காவல் நிலையத்திற்கு வந்தார் ரிஷியின் தந்தை முருகேசன்.

சுயம்புலிங்கம் வந்து இந்த விஷயத்தை தெரிவிக்க, அவர்களை சந்திக்கச் சென்றான் அரண் செழியன்.

எந்த அடிப்படையில என்னோட க்ளையன்டை நீங்க இங்கே விசாரணைக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க சார்? எந்த விதமான ஆதாரமோ இல்ல வாரன்டோ இல்லாம எப்படி நீங்க அவரை விலங்கு மாட்டி பிடிக்கலாம்?” என்றார் அந்த வக்கீல்.

ஆதாரம் இல்லைன்னு யார் சொன்னது? ரிஷியோட வீட்டில் இருந்து தான் சுபத்ராவோட வண்டியை சீஸ் பண்ணியிருக்கோம். அதுமட்டுமில்லநான் சாதாரணமா பேசிட்டு இருக்கும் போதே, அவன் தப்பிச்சு ஓட முயற்சி செஞ்சான். அந்த அடிப்படையில, சந்தேகத்தின் பேர்ல தான் அவனை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்தோம். விசாரணை முடியுற வரைக்கும் ரிஷியை அனுப்ப முடியாதுஎன்றவன், எழுந்து உள்ளே சென்று விட்டான்.

மறுநாள் ரிஷி கொடுத்த ஸ்டேட்மென்டின் உண்மை தன்மையை அறிய, வள்ளியூருக்கே சென்று விசாரணை நடத்தினான் அரண் செழியன்.

அவன் சொன்னது போல, பேருந்து நிலையம் அருகே இருந்த சில சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது, அவனது காரை வேறு ஒரு கார் வந்து மோதியது ஆதாரத்துடன் பதிவாகியிருந்தது.

அதுமட்டுமின்றி, ரிஷியின் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவும் ஒரு வாரத்திற்கு முன்பே பழுதாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆனால், சுபத்ராவின் வண்டி அவனது வீட்டில் நின்றது மட்டும் செழியனுக்கு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதன் பிறகு, ரிஷியை காவல் நிலையத்தில் இருந்து விடுவித்தவன், விசாரணை முடியும் வரை அவன் வீட்டை விட்டு எங்கும் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தான்.

இப்படியே இரு தினங்கள் கழிந்திருக்க, அன்று காவல் நிலையத்தில் இருந்த அரண் செழியனின் அலைபேசி எண்ணுக்கு அவசரமாக அழைத்தாள் பார்கவி.

ஹலோசொல்லு பாரூசாப்பிட்டியா?” என்று கேட்டவனிடம்,

செழியன்நம்ம சுபத்ரா கண்ணு முழிச்சுட்டாளாம். இப்போ தான் எனக்கு தாமரை ஆன்டி ஃபோன் பண்ணி சொன்னாங்கஎன்றாள்.

அரண் செழியனுக்கு அந்த செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியாக இருக்க, “சரி! நான் உடனே வீட்டுக்கு கிளம்பி வர்றேன். இரண்டு பேரும் ஹாஸ்பிட்டலுக்குப் போய் சுபத்ராவை பார்த்துட்டு வந்துடலாம்என்றான்.

அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் மருத்துவமனையில் இருந்தனர். சுபத்ரா அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டிருந்தாள்.

அவள் நல்லபடியாக உயிர் பிழைத்து வந்ததைக் கண்ட பார்கவிக்கு மகிழ்ச்சியில் கண்கள் கலங்க, “ஊர்ல இருந்து எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்கக்கா?” என்று கேட்டாள் சுபத்ரா.

அவளை ஆரத்தழுவி, “உனக்கு பிடிச்சது எல்லாமே வாங்கியிருக்கேன் சுபா. நீ சீக்கிரமா சரியாகி வீட்டுக்குத் திரும்பி வாஎன்றாள்.

அதன் பிறகு, அரண் செழியன் சுபத்ராவிடம் விபத்து பற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறி, அனைவரையும் சிறிது நேரம் வெளியே இருக்கச் சொன்னான்.

அவர்கள் சென்றதும், “சொல்லு சுபத்ராஉனக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு? இந்த விபத்து தற்செயலா நடந்தது தானா?” என்று செழியன் கேட்க, அவள் இல்லை என்று தலையாட்டினாள்.

அப்படின்னாயாரோ வேணும்னு தான் உன்னை ஆக்சிடென்ட் பண்ணாங்களா?” என்று கேட்க, ஆம் என்று பதிலளித்தாள்.

புருவங்கள் சுருக்கி, “உன்னோட இந்த நிலமைக்கு யார் காரணம்னு தைரியமா சொல்லு. மற்றதை நான் பார்த்துக்குறேன்!” என்று அவளுக்கு தைரியமூட்டினான் செழியன்.

அவள் ரிஷியினுடைய பெயரை தான் சொல்ல போகிறாள் என்று அவன் தொண்ணூறு சதவீதம் நம்பிக்கையுடன் இருக்க, அவளோ, “என்னோட இந்த நிலமைக்குக் காரணம் MLAவோட மகன் கார்த்திகேயன் தான் சார்என்றாள் சுபத்ரா.

அதைக் கேட்டதும், “வாட்?” என்றபடி அதிர்ந்து போனான் அரண் செழியன்.

அரணாய் வருவான்

மீண்டும் சந்திப்போம்!

பிரியமுடன்,

சௌஜன்யா

Comments

Post a Comment

Popular posts

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 8

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 9

அரணாய் நீ வா (பாகம் 2) - Epi 7