Posts

Showing posts from October, 2024

Ongoing Novels

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 11

Image
  அரணாய் நீ வா ! பாகம் 2 அத்தியாயம் – 11 “ கார்த்திகேயனா ? உனக்கு நல்லா தெரியுமா சுபத்ரா !” என்று அதிர்ச்சி மாறாமல் கேட்ட அரண் செழியனிடம் , “ ஆமா சார் ! எனக்கு நூறு சதவீதம் உறுதியா தெரியும் . என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனது அவர் தான் ” என்றாள் சுபத்ரா . அதைக் கேட்டு பெருமூச்சு விட்டவன் , “ சரி ! சொல்லு சுபத்ரா . உனக்கு ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு என்ன நடந்தது ?” என்று செழியன் கேட்க , அவள் அந்தச் சம்பவத்தைப் பற்றி அவனிடம் விவரிக்க ஆரம்பித்தாள் . அன்று சுபத்ராவிற்கு மதியம் வரை மட்டுமே கல்லூரி இருக்க , தனது இருச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் . ரிஷியின் வீடு இருக்கும் இடத்தைக் கடந்து தான் அவள் தனது வீட்டிற்குச் செல்ல வேண்டும் . அந்த வீட்டை அவள் கடந்து சென்ற நேரத்தில் கேட்டை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தாள் ஒரு பெண் . முகம் முழுக்க வியர்த்துப் போயிருக்க , படபடப்பாகக் காணப்பட்டாள் அவள் . சுபத்ரா வருவதைக் கண்டதும் அவசரமாக கரம் நீட்டித் தடுத்து , வண்டியை நிறுத்தும்படி கூறினாள் . அந்தப் பெண்ணின் முகம் சுபத்ராவிற்கு பரிச்சயமாக இருக்கவும் , யோசனையுடன் சடன...

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 5

Image
  அரணாய் நீ வா !  பாகம் – 2   அத்தியாயம் – 5 மறுநாள் காலையில் தனது பபிற்சிக்காக ஆயுதப்படை வளாகத்திற்கு கிளம்பிச் சென்றான் அரண் செழியன் . வெளியே வண்டியை நிறுத்திவிட்டு , பார்கவியின் ஒப்பனை வகுப்பு நடைபெறும் ஹோட்டலைப் பார்த்தவன் , தனது பயிற்சிக்காக உள்ளே செல்ல நினைத்த பொழுது , அந்த வழியாக நடந்து வருபவளைப் பார்த்தான் . அவள் அருகில் வந்ததும் , “ குட்மார்னிங் !” என்று செழியன் கூற , அவளோ அவனது குரல் கேட்டு சட்டென நின்று விட்டாள் . “ குட்மார்னிங் !” என்று புன்னகையுடன் அவள் பதிலளிக்க , “ ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சாச்சா ?” என்று கேட்டான் . அதற்கு ஆம் என்று தலையசைத்தவள் , “ நீங்க சாப்பிடாச்சா ?” என்று கேட்க , “ இனிமே தான் . கேம்ப்ல குடுப்பாங்க ” என்றான் . அதன் பிறகு என்ன பேசுவது என்று இருவரும் புரியாமல் நிற்க , “ மதியம் ஃப்ரீயா ?” என்று கேட்டான் செழியன் . அவளோ ஏன் கேட்கிறான் என்று புரியாமல் விழித்தாலும் , “ ஃப்ரீ தான் . இன்னைக்கு மதியம் வரை தான் க்ளாஸ் ” என்றாள் . அவளது பதிலைக் கேட்டு திருப்தியடைந்தவன் , “ அப்படின்னா … இன்னைக்கு லஞ்ச் ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிடல...

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 4

Image
  அரணாய் நீ வா ! பாகம் – 2   அத்தியாயம் – 4 எதிர்பாராத சந்திப்பு இருவருக்கும் முதலில் ஆச்சர்யத்தை தான் கொடுத்தது . இருவருமே அந்த நேரத்தில் , அந்த இடத்தில் வைத்து சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை ! தான் பருகி முடித்த இளநீரை கீழே போட்டுவிட்டு தனக்கு எதிரே நின்றிருந்த பார்கவியிடம் சென்றான் அரண் செழியன் . புருவங்கள் சுருக்கி , “ நீ எப்படி இங்கே ?” என்று அவன் கேட்க , அவளுக்கு , ஒரு கணம் பதில் சொல்லலாமா ? வேண்டாமா ? என்று சற்று தயக்கமாக இருந்தது . அவளது தயக்கம் கண்டு , “ இட்ஸ் ஓகே ! விருப்பம் இல்லைன்னா சொல்ல வேண்டாம் ” என்று எங்கோ பார்த்தபடி அவன் கூற , “ இல்ல … அது …” என்றவள் , “ இங்கே நடக்குற ஒரு மேக்கப் மாஸ்டர் க்ளாஸ்ல சேர்ந்திருக்கேன் . பதினஞ்சு நாள் கோர்ஸ் ” என்றவள் , சாலைக்கு எதிர்புறமாக இருந்த ஒரு பெரிய ஹோட்டலை சுட்டிக் காட்டி , “ அந்த ஹோட்டல்ல தான் க்ளாஸ் நடக்குது ” என்றாள் . அதைக் கேட்டவன் , “ ஓஹ் … ஓகே ” என்று பதிலளிக்க , அவளோ , “ நீங்க ?” என்றபடி அவனை கேள்வியாக நோக்கினாள் . “ எங்க டிபார்ட்மென்ட்ல இருந்து ஒரு ட்ரெய்னிங் அட்டென்ட் பண்ணுறதுக்காக என்...

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 3

Image
அரணாய் நீ வா ! பாகம் – 2   அத்தியாயம் – 3 களக்காடு காவல் நிலையம் ! தனது தனியறையில் கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்த அரண் செழியனைத் தேடிச் சென்றார் ஏட்டு சுயம்புலிங்கம் . “ சார் !” என்றவரிடம் , “ வாங்க ஏட்டாய்யா !” என்றபடி நிமிர்ந்து அவரை பார்த்தான் செழியன் . “ சார் ! இன்னைக்கு நம்ம ஊர் பள்ளிக்கூடத்துல புது நூலகத் திறப்புவிழாவுக்கு உங்களை சீஃப் கெஸ்டா கூப்பிட்டிருந்தாங்களே ” என்று அவர் நினைவுப்படுத்தவும் , “ ஓஹ் … அந்தத் திறப்புவிழா இன்னைக்கு தானா ? மறந்தே போயிட்டேன் ” என்றவன் , “ எத்தனை மணிக்கு ஃபங்ஷன் ?” என்று கேட்டான் . “ பத்து மணிக்கு சார் ” என்று அவர் பதிலளிக்க , கடிகாரத்தில் மணியைப் பார்த்தவன் , “ இன்னும் அரைமணி நேரம் இருக்கு . அதுக்குள்ள இந்த ஃபைல்சை பார்த்து முடிச்சுடறேன் . சரியா ஒன்பது ஐம்பதுக்கு இங்கிருந்து கிளம்பிடலாம் ” என்று கூற , சுயம்புலிங்கமும் சரியென்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் . சொன்னபடியே சரியான நேரத்திற்கு ஸ்டேஷனில் இருந்து கிளம்பிச் சென்றான் அரண் செழியன் . ஏட்டு சுயம்புலிங்கத்துடன் சரியாக ஒன்பது ஐம்பத்தி எட்டுக்கு அந்த ஊரி...