Posts

Showing posts from September, 2024

Ongoing Novels

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 11

Image
  அரணாய் நீ வா ! பாகம் 2 அத்தியாயம் – 11 “ கார்த்திகேயனா ? உனக்கு நல்லா தெரியுமா சுபத்ரா !” என்று அதிர்ச்சி மாறாமல் கேட்ட அரண் செழியனிடம் , “ ஆமா சார் ! எனக்கு நூறு சதவீதம் உறுதியா தெரியும் . என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனது அவர் தான் ” என்றாள் சுபத்ரா . அதைக் கேட்டு பெருமூச்சு விட்டவன் , “ சரி ! சொல்லு சுபத்ரா . உனக்கு ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு என்ன நடந்தது ?” என்று செழியன் கேட்க , அவள் அந்தச் சம்பவத்தைப் பற்றி அவனிடம் விவரிக்க ஆரம்பித்தாள் . அன்று சுபத்ராவிற்கு மதியம் வரை மட்டுமே கல்லூரி இருக்க , தனது இருச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் . ரிஷியின் வீடு இருக்கும் இடத்தைக் கடந்து தான் அவள் தனது வீட்டிற்குச் செல்ல வேண்டும் . அந்த வீட்டை அவள் கடந்து சென்ற நேரத்தில் கேட்டை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தாள் ஒரு பெண் . முகம் முழுக்க வியர்த்துப் போயிருக்க , படபடப்பாகக் காணப்பட்டாள் அவள் . சுபத்ரா வருவதைக் கண்டதும் அவசரமாக கரம் நீட்டித் தடுத்து , வண்டியை நிறுத்தும்படி கூறினாள் . அந்தப் பெண்ணின் முகம் சுபத்ராவிற்கு பரிச்சயமாக இருக்கவும் , யோசனையுடன் சடன...

அரணாய் நீ வா - Epi 15

Image
  அரணாய் நீ வா !   அத்தியாயம் – 15 மறுநாள் காலை … வணக்கம் ! சற்று முன்னர் கிடைத்த அண்மைச் செய்தி . களக்காடு கான்டிராக்டர் செல்வன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது ! நேற்றிரவு நடந்த தேடுதல் வேட்டையில் , கோவில்பட்டியில் வைத்து ப்ளேடு சேகர் என்ற ரவுடியை அதிரடியாகக் கைது செய்தது காவல்துறை . இதுவரை இவ்வழக்கில் மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் , இன்னும் சற்று நேரத்தில் மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்கிற தகவல் கிடைத்துள்ளது . ரவுடி சேகர் மற்றும் அவனது கூட்டாளிகளை அதிரடியாகக் கைது செய்த களக்காடு காவல்நிலைய ஆய்வாளர் அரண் செழியன் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன . இப்படியான ப்ரேக்கிங் நியூஸ் அனைத்து முக்கிய செய்தி சேனல்களிலும் ஔிபரப்பாகிக் கொண்டிருக்க , தொலைக்காட்சியில் காட்டப்பட்ட அரண் செழியனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பார்கவி . களக்காட்டில் இருந்து கிளம்பி வந்ததில் இருந்து அவனிடம் அவள் பேச முயற்சிக்கவில்லை . பேருந்தில் வைத்துப் பேசியதோடு சரி ! அதன் பிற...

அரணாய் நீ வா - Epi 14

Image
  அரணாய் நீ வா !   அத்தியாயம் – 14 நள்ளிரவு மூன்றரை மணியளவில் அந்தக் காவலர் குழு கோவில்பட்டியை அடைந்தது . களக்காட்டில் இருந்து கிளம்பும் பொழுதே தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் கைது நடவடிக்கைக் குறித்தான விபரங்களைக் கோவில்பட்டி சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு தெரிவித்திருந்தான் அரண் செழியன் . அவர்களும் இந்த வழக்கிற்கு தங்களால் முடிந்த ஒத்துழைப்பை வழங்குவதாகக் கூறியிருந்தனர் . அந்த நள்ளிரவு வேளையில் , அகிலாண்டபுரம் என்ற கிராமத்து எல்லையில் நின்றிருந்தது அந்தப் பெரிய காவல் வாகனம் . உள்ளே அமர்ந்தபடி தனது அலைபேசியில் இருந்த ஒருவனின் புகைப்படத்தையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் செழியன் . “ ஏட்டய்யா … இவனைப் பத்தின ஃபுல் டிட்டெயில்ஸ் சொல்லுங்க !” என்று அவன் கேட்க , “ இவன் பெயர் சேகர் சார் . களக்காடு பக்கத்துல புதூருங்கற கிராமம் தான் இவனோட சொந்த ஊர் . சுமார் இருபது வருஷத்துக்கு முன்னாடி திருநெல்வேலியில பெரிய ரவுடியா பெயர் வாங்கியிருந்த நட்ராஜ் கேங்கைச் சேர்ந்தவன் ” “ சின்ன வயசுல இருந்து ப்ளேடால கீறி பிக் பாக்கெட் அடிச்சு பிரபலமானதால இவனுக்கு ப்ள...

அரணாய் நீ வா - Epi 13

Image
  அரணாய் நீ வா !   அத்தியாயம் – 13 தான் கேட்டதற்கு பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தவனிடம் , “ சொல்லுங்க செழியன் ! எனக்காக உங்க போலீஸ் வேலையை விடுவீங்க தானே !” என்று குரலில் எதிர்பார்ப்புடன் அவனிடம் கேட்டாள் பார்கவி . சில நொடிகள் மௌனமாக இருந்தவன் எங்கோ பார்த்தபடி , “ என்னால அது முடியாது பாரூ …” என்றான் . “ ஏன் ?” என்று சட்டென கேட்டவளிடம் , “ லிசின் … நேத்து நான் சொன்னதுக்கு அர்த்தம் வேற . நீ புரிஞ்சுக்காம பேசிட்டு இருக்க . இப்போதைக்கு இந்தப் பேச்சை விடு பாரூ ” என்றான் செழியன் . விழியோரம் வழியவிருந்த நீரை அணை போட்டு தடுத்தபடி , “ அப்போ … நீங்க கடைசி வரைக்கும் போலீசா தான் இருக்கப் போறீங்க . அப்படித்தானே ” என்று அவள் கேட்டதற்கு அவன் மௌனத்தையே பதிலாக அளிக்க , “ ஃபைன் … இதுதான் உங்க முடிவுன்னா … அப்போ நானும் சில முடிவுகள் எடுத்தாகணும் ” என்றவள் , “ உடம்பை பார்த்துக்கோங்க . நான் கிளம்புறேன் !” என்று அவனிடம் கூறிவிட்டு வேகமாக நடந்து அந்த அறையில் இருந்து வெளியேறினாள் பார்கவி . தன்னை விட்டு விலகிச் செல்பவளையே , அவள் போகும் வரை பார்த்திருந்தவன் விழி மூடியபடி மெத்தையி...