அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 16
அரணாய் நீ வா! பாகம் - 2 அத்தியாயம் – 16 ஜாமீனில் வெளியே வந்த கார்த்திகேயனை ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து வந்தார் அவனது தாய் கமலா. கனகரத்தினம் சோஃபாவில் அமர்ந்திருக்க அவரின் அருகில் சென்று, “அப்பா!” என்றழைத்தான் கார்த்திகேயன். அவனது மனதில் பயம் இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவர் முன்பு நின்றிருந்தான். கனகரத்தானம் தன் மகனை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. “ஆஃபிஸ் ரூமுக்கு வா” என்று கூறிவிட்டு எழுந்து சென்றார். அவனோ திரும்பி தன் அண்ணனைப் பார்க்க, “தைரியமா போ கார்த்தி!” என்று கூறி அவனை அனுப்பி வைத்தான் குமரவேல். அவன் தன் தந்தையின் அலுவலக அறைக்குள் சென்ற போது அவர் ஜன்னல் அருகே நின்றிருந்தார். கார்த்திகேயனோ எச்சில் விழுங்காயபடி, “அப்பா!” என்றழைக்க, அவனை திரும்பி பார்த்தவர், “உன்கிட்ட எத்தனை முறை படிச்சு படிச்சு சொன்னேன்… வெளியே தெரியுற மாதிரி தப்பு பண்ணாதேன்னு. ஆனா, நீ திருந்தவே மாட்டேல்ல” என்று சற்று கோபத்துடனே பேச, “இல்லப்பா… அது” என்று ஏதோ சொல்ல வந்தான் அவன். அவனை நெருங்கி வந்து, “போதும் நிறுத்து!” என்றவர், “அந்தப் பொண்ணை கார் ஏத்தி ஆக்சிடென்ட் பண்ண விஷயத்தை...