Posts

Showing posts from November, 2024

Ongoing Novels

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 9

Image
  அரணாய் நீ வா ! பாகம் 2   அத்தியாயம் – 9 இப்படியே ஒரு வாரம் கடந்திருக்க , அரண் செழியனையும் பார்கவியையும் தனது வீட்டிற்கு விருந்திற்காக அழைத்திருந்தார் MLA கனகரத்தினம் . செழியனுக்கோ , அவரது வீட்டிற்கு செல்வதில் துளியளவும் விருப்பமில்லை . ஆனால் , தானும் அதே ஊரில் பணி செய்வதால் , கனகரத்தினத்தை பல்றேு சூழல்களில் சந்திக்க வேண்டி வரும் என்று நினைத்து அவரது வீட்டிற்குச் செல்ல ஒப்புக் கொண்டான் . நண்பகல் பன்னிரெண்டு மணியளவில் , கனகரத்தினத்தின் வீட்டிற்குச் சென்றனர் இருவரும் . அவனது புல்லட் சத்தம் கேட்டு வெளியே வந்த ஜீவானந்தம் , “ வாங்க வாங்க சார் ! நம்ம ஐயா உங்களை எதிர்பார்த்து தான் காத்துகிட்டு இருக்காங்க ” என்றான் . அரண் செழியனும் அவனிடம் சரியென்று தலையசைத்து , பார்கவியுடன் சேர்ந்து அவரது வீட்டிற்குச் சென்றான் . அந்த வீடே ஒரு மாளிகை போன்று பெரிதாகவும் , பிரம்மாண்டமாகவும் இருந்தது . ஹாலில் இருந்த பெரிய சோஃபாவில் கனகரத்தினம் அமர்ந்திருக்க , “ வணக்கம் சார் !” என்றபடியே அவரை நோக்கி சென்றான் செழியன் . அவரோ , “ வணக்கம் தம்பி ! வாங்க வாங்க !” என்றவர் , அவனருகே நின்ற பார்க

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 8

Image
  அரணாய் நீ வா ! பாகம் 2   அத்தியாயம் – 8 இரண்டு மாதங்களுக்குப் பிறகு … லேசான சூரிய வெளிச்சம் ஜன்னல் வழியாக அந்த அறைக்குள் பரவிய வேளையில் , அலாரத்தின் மணியோசை கேட்டு உறக்கம் கலைந்து எழுந்தான் அரண் செழியன் . கட்டிலில் படுத்தவாறே சோம்பல் முறித்தவன் , திரும்பிப் பார்த்த போது படுக்கை காலியாக இருந்தது . புன்னகையுடன் கட்டிலைவிட்டு எழுந்தவன் , தன் மனைவியைத் தேடிச் சென்றான் . இன்றுடன் அவனுக்கும் பார்கவிக்கும் திருமணம் முடிந்து பத்து நாட்கள் ஆகியிருந்தன . தங்கள் பெற்றோரிடம் சம்மதம் வாங்கியவன் , திருமணத்தை அதிக ஆடம்பரம் இல்லாமல் நடத்த வேண்டும் என்று கூறிவிட்டான் . அதன் பிறகு , மதுரையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர்களது சொந்தபந்தங்கள் , காவல்துறை நண்பர்கள் என்று நிறைய பேர் கலந்து கொண்டனர் . பார்கவியைத் திருமணம் முடித்து இதோ , இப்பொழுது அவளை களக்காட்டிற்கும் அழைத்து வந்துவிட்டான் . திருமணத்திற்குப் பிறகு அவளுடன் வாழ்வது அவனுக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது . அறையைவிட்டு வெளியே வந்தவனை காஃபி மணம் சுண்டி இழுக்க , அரவம் எழுப்பாமல் சமையலறைக்குச் சென்றான் . அங