Posts

Showing posts from October, 2024

Ongoing Novels

அரணாய் நீ வா! (பாகம் 2) - Epi 10

Image
  அரணாய் நீ வா ! பாகம் 2   அத்தியாயம் – 10 மூணாறில் இருந்து திரும்பி வந்ததும் முதல் வேலையாக , சுபத்ராவை பார்க்கச் சென்றாள் பார்கவி . அவளுக்காக சில பரிசுப் பொருட்களை வாங்கி வந்தவள் , அவளது வீடு தேடிச் சென்றாள் . அழைப்பு மணியை அவள் அழுத்தவும் , கதவை திறந்தார் சுபத்ராவின் தாய் தாமரை . பார்கவியைக் கண்டவர் , “ வாம்மா …” என்று அழைத்தாலும் , அவரது முகம் வாட்டமாக இருக்க , குழப்பமடைந்தாள் பார்கவி . உள்ளே சென்றவள் , “ என்னாச்சு ஆன்டி . ஏன் டல்லா இருக்கீங்க ?” என்று கேட்க , விக்கி அழ ஆரம்பித்து விட்டார் அவர் . பதறிப் போனவள் , “ ஐயோ ! என்னாச்சு ஆன்டி ? ஏன் அழறீங்க ?” என்று கேட்டவளிடம் , “ நம்ம சுபத்ரா …” என்றவருக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை . அவர் ஏங்கி ஏங்கி அழவும் , “ சுபத்ராவுக்கு என்னாச்சு ?” என்று கேட்டாள் . “ அவளுக்கு ஆக்சிடென்ட் ஆயிருச்சும்மா !” என்ற தாமரையிடம் , “ ஆக்சிடென்டா ? எப்போ ? எப்படி ?” என்றபடி பதட்டமானாள் பார்கவி . “ இரண்டு நாள் முன்னாடி காலேஜூக்கு அவளோட டூ வீலர்ல கிளம்பிப் போனா … மதியம் எங்களுக்கு ஹாஸ்பிடல்ல இருந்து ஃபோன் வந்தது . ஆக்சிடென்டுன

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 5

Image
  அரணாய் நீ வா !  பாகம் – 2   அத்தியாயம் – 5 மறுநாள் காலையில் தனது பபிற்சிக்காக ஆயுதப்படை வளாகத்திற்கு கிளம்பிச் சென்றான் அரண் செழியன் . வெளியே வண்டியை நிறுத்திவிட்டு , பார்கவியின் ஒப்பனை வகுப்பு நடைபெறும் ஹோட்டலைப் பார்த்தவன் , தனது பயிற்சிக்காக உள்ளே செல்ல நினைத்த பொழுது , அந்த வழியாக நடந்து வருபவளைப் பார்த்தான் . அவள் அருகில் வந்ததும் , “ குட்மார்னிங் !” என்று செழியன் கூற , அவளோ அவனது குரல் கேட்டு சட்டென நின்று விட்டாள் . “ குட்மார்னிங் !” என்று புன்னகையுடன் அவள் பதிலளிக்க , “ ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சாச்சா ?” என்று கேட்டான் . அதற்கு ஆம் என்று தலையசைத்தவள் , “ நீங்க சாப்பிடாச்சா ?” என்று கேட்க , “ இனிமே தான் . கேம்ப்ல குடுப்பாங்க ” என்றான் . அதன் பிறகு என்ன பேசுவது என்று இருவரும் புரியாமல் நிற்க , “ மதியம் ஃப்ரீயா ?” என்று கேட்டான் செழியன் . அவளோ ஏன் கேட்கிறான் என்று புரியாமல் விழித்தாலும் , “ ஃப்ரீ தான் . இன்னைக்கு மதியம் வரை தான் க்ளாஸ் ” என்றாள் . அவளது பதிலைக் கேட்டு திருப்தியடைந்தவன் , “ அப்படின்னா … இன்னைக்கு லஞ்ச் ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிடலாம் . மதியம் ந

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 4

Image
  அரணாய் நீ வா ! பாகம் – 2   அத்தியாயம் – 4 எதிர்பாராத சந்திப்பு இருவருக்கும் முதலில் ஆச்சர்யத்தை தான் கொடுத்தது . இருவருமே அந்த நேரத்தில் , அந்த இடத்தில் வைத்து சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை ! தான் பருகி முடித்த இளநீரை கீழே போட்டுவிட்டு தனக்கு எதிரே நின்றிருந்த பார்கவியிடம் சென்றான் அரண் செழியன் . புருவங்கள் சுருக்கி , “ நீ எப்படி இங்கே ?” என்று அவன் கேட்க , அவளுக்கு , ஒரு கணம் பதில் சொல்லலாமா ? வேண்டாமா ? என்று சற்று தயக்கமாக இருந்தது . அவளது தயக்கம் கண்டு , “ இட்ஸ் ஓகே ! விருப்பம் இல்லைன்னா சொல்ல வேண்டாம் ” என்று எங்கோ பார்த்தபடி அவன் கூற , “ இல்ல … அது …” என்றவள் , “ இங்கே நடக்குற ஒரு மேக்கப் மாஸ்டர் க்ளாஸ்ல சேர்ந்திருக்கேன் . பதினஞ்சு நாள் கோர்ஸ் ” என்றவள் , சாலைக்கு எதிர்புறமாக இருந்த ஒரு பெரிய ஹோட்டலை சுட்டிக் காட்டி , “ அந்த ஹோட்டல்ல தான் க்ளாஸ் நடக்குது ” என்றாள் . அதைக் கேட்டவன் , “ ஓஹ் … ஓகே ” என்று பதிலளிக்க , அவளோ , “ நீங்க ?” என்றபடி அவனை கேள்வியாக நோக்கினாள் . “ எங்க டிபார்ட்மென்ட்ல இருந்து ஒரு ட்ரெய்னிங் அட்டென்ட் பண்ணுறதுக்காக என்னை இங்கே

அரணாய் நீ வா(பாகம் 2) - Epi 3

Image
அரணாய் நீ வா ! பாகம் – 2   அத்தியாயம் – 3 களக்காடு காவல் நிலையம் ! தனது தனியறையில் கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்த அரண் செழியனைத் தேடிச் சென்றார் ஏட்டு சுயம்புலிங்கம் . “ சார் !” என்றவரிடம் , “ வாங்க ஏட்டாய்யா !” என்றபடி நிமிர்ந்து அவரை பார்த்தான் செழியன் . “ சார் ! இன்னைக்கு நம்ம ஊர் பள்ளிக்கூடத்துல புது நூலகத் திறப்புவிழாவுக்கு உங்களை சீஃப் கெஸ்டா கூப்பிட்டிருந்தாங்களே ” என்று அவர் நினைவுப்படுத்தவும் , “ ஓஹ் … அந்தத் திறப்புவிழா இன்னைக்கு தானா ? மறந்தே போயிட்டேன் ” என்றவன் , “ எத்தனை மணிக்கு ஃபங்ஷன் ?” என்று கேட்டான் . “ பத்து மணிக்கு சார் ” என்று அவர் பதிலளிக்க , கடிகாரத்தில் மணியைப் பார்த்தவன் , “ இன்னும் அரைமணி நேரம் இருக்கு . அதுக்குள்ள இந்த ஃபைல்சை பார்த்து முடிச்சுடறேன் . சரியா ஒன்பது ஐம்பதுக்கு இங்கிருந்து கிளம்பிடலாம் ” என்று கூற , சுயம்புலிங்கமும் சரியென்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் . சொன்னபடியே சரியான நேரத்திற்கு ஸ்டேஷனில் இருந்து கிளம்பிச் சென்றான் அரண் செழியன் . ஏட்டு சுயம்புலிங்கத்துடன் சரியாக ஒன்பது ஐம்பத்தி எட்டுக்கு அந்த ஊரில் இ