Posts

Showing posts from September, 2024

Ongoing Novels

அரணாய் நீ வா! (பாகம் 2) - Epi 10

Image
  அரணாய் நீ வா ! பாகம் 2   அத்தியாயம் – 10 மூணாறில் இருந்து திரும்பி வந்ததும் முதல் வேலையாக , சுபத்ராவை பார்க்கச் சென்றாள் பார்கவி . அவளுக்காக சில பரிசுப் பொருட்களை வாங்கி வந்தவள் , அவளது வீடு தேடிச் சென்றாள் . அழைப்பு மணியை அவள் அழுத்தவும் , கதவை திறந்தார் சுபத்ராவின் தாய் தாமரை . பார்கவியைக் கண்டவர் , “ வாம்மா …” என்று அழைத்தாலும் , அவரது முகம் வாட்டமாக இருக்க , குழப்பமடைந்தாள் பார்கவி . உள்ளே சென்றவள் , “ என்னாச்சு ஆன்டி . ஏன் டல்லா இருக்கீங்க ?” என்று கேட்க , விக்கி அழ ஆரம்பித்து விட்டார் அவர் . பதறிப் போனவள் , “ ஐயோ ! என்னாச்சு ஆன்டி ? ஏன் அழறீங்க ?” என்று கேட்டவளிடம் , “ நம்ம சுபத்ரா …” என்றவருக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை . அவர் ஏங்கி ஏங்கி அழவும் , “ சுபத்ராவுக்கு என்னாச்சு ?” என்று கேட்டாள் . “ அவளுக்கு ஆக்சிடென்ட் ஆயிருச்சும்மா !” என்ற தாமரையிடம் , “ ஆக்சிடென்டா ? எப்போ ? எப்படி ?” என்றபடி பதட்டமானாள் பார்கவி . “ இரண்டு நாள் முன்னாடி காலேஜூக்கு அவளோட டூ வீலர்ல கிளம்பிப் போனா … மதியம் எங்களுக்கு ஹாஸ்பிடல்ல இருந்து ஃபோன் வந்தது . ஆக்சிடென்டுன

அரணாய் நீ வா - Epi 15

Image
  அரணாய் நீ வா !   அத்தியாயம் – 15 மறுநாள் காலை … வணக்கம் ! சற்று முன்னர் கிடைத்த அண்மைச் செய்தி . களக்காடு கான்டிராக்டர் செல்வன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது ! நேற்றிரவு நடந்த தேடுதல் வேட்டையில் , கோவில்பட்டியில் வைத்து ப்ளேடு சேகர் என்ற ரவுடியை அதிரடியாகக் கைது செய்தது காவல்துறை . இதுவரை இவ்வழக்கில் மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் , இன்னும் சற்று நேரத்தில் மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்கிற தகவல் கிடைத்துள்ளது . ரவுடி சேகர் மற்றும் அவனது கூட்டாளிகளை அதிரடியாகக் கைது செய்த களக்காடு காவல்நிலைய ஆய்வாளர் அரண் செழியன் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன . இப்படியான ப்ரேக்கிங் நியூஸ் அனைத்து முக்கிய செய்தி சேனல்களிலும் ஔிபரப்பாகிக் கொண்டிருக்க , தொலைக்காட்சியில் காட்டப்பட்ட அரண் செழியனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பார்கவி . களக்காட்டில் இருந்து கிளம்பி வந்ததில் இருந்து அவனிடம் அவள் பேச முயற்சிக்கவில்லை . பேருந்தில் வைத்துப் பேசியதோடு சரி ! அதன் பிறகு , தன்

அரணாய் நீ வா - Epi 14

Image
  அரணாய் நீ வா !   அத்தியாயம் – 14 நள்ளிரவு மூன்றரை மணியளவில் அந்தக் காவலர் குழு கோவில்பட்டியை அடைந்தது . களக்காட்டில் இருந்து கிளம்பும் பொழுதே தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் கைது நடவடிக்கைக் குறித்தான விபரங்களைக் கோவில்பட்டி சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு தெரிவித்திருந்தான் அரண் செழியன் . அவர்களும் இந்த வழக்கிற்கு தங்களால் முடிந்த ஒத்துழைப்பை வழங்குவதாகக் கூறியிருந்தனர் . அந்த நள்ளிரவு வேளையில் , அகிலாண்டபுரம் என்ற கிராமத்து எல்லையில் நின்றிருந்தது அந்தப் பெரிய காவல் வாகனம் . உள்ளே அமர்ந்தபடி தனது அலைபேசியில் இருந்த ஒருவனின் புகைப்படத்தையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் செழியன் . “ ஏட்டய்யா … இவனைப் பத்தின ஃபுல் டிட்டெயில்ஸ் சொல்லுங்க !” என்று அவன் கேட்க , “ இவன் பெயர் சேகர் சார் . களக்காடு பக்கத்துல புதூருங்கற கிராமம் தான் இவனோட சொந்த ஊர் . சுமார் இருபது வருஷத்துக்கு முன்னாடி திருநெல்வேலியில பெரிய ரவுடியா பெயர் வாங்கியிருந்த நட்ராஜ் கேங்கைச் சேர்ந்தவன் ” “ சின்ன வயசுல இருந்து ப்ளேடால கீறி பிக் பாக்கெட் அடிச்சு பிரபலமானதால இவனுக்கு ப்ளேடு சேகர்

அரணாய் நீ வா - Epi 13

Image
  அரணாய் நீ வா !   அத்தியாயம் – 13 தான் கேட்டதற்கு பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தவனிடம் , “ சொல்லுங்க செழியன் ! எனக்காக உங்க போலீஸ் வேலையை விடுவீங்க தானே !” என்று குரலில் எதிர்பார்ப்புடன் அவனிடம் கேட்டாள் பார்கவி . சில நொடிகள் மௌனமாக இருந்தவன் எங்கோ பார்த்தபடி , “ என்னால அது முடியாது பாரூ …” என்றான் . “ ஏன் ?” என்று சட்டென கேட்டவளிடம் , “ லிசின் … நேத்து நான் சொன்னதுக்கு அர்த்தம் வேற . நீ புரிஞ்சுக்காம பேசிட்டு இருக்க . இப்போதைக்கு இந்தப் பேச்சை விடு பாரூ ” என்றான் செழியன் . விழியோரம் வழியவிருந்த நீரை அணை போட்டு தடுத்தபடி , “ அப்போ … நீங்க கடைசி வரைக்கும் போலீசா தான் இருக்கப் போறீங்க . அப்படித்தானே ” என்று அவள் கேட்டதற்கு அவன் மௌனத்தையே பதிலாக அளிக்க , “ ஃபைன் … இதுதான் உங்க முடிவுன்னா … அப்போ நானும் சில முடிவுகள் எடுத்தாகணும் ” என்றவள் , “ உடம்பை பார்த்துக்கோங்க . நான் கிளம்புறேன் !” என்று அவனிடம் கூறிவிட்டு வேகமாக நடந்து அந்த அறையில் இருந்து வெளியேறினாள் பார்கவி . தன்னை விட்டு விலகிச் செல்பவளையே , அவள் போகும் வரை பார்த்திருந்தவன் விழி மூடியபடி மெத்தையில் சரிந்த